அருள்மிகு ஸ்ரீ லட்சுமிநரசிம்மர் திருக்கோவில் (பரிக்கல்)
God Name : ஸ்ரீ லட்சுமிநரசிம்மர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கர்குடி ஆகிய மூன்று ஸ்தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.
கிருஷ்ணாரண்யமாக இருந்த இப்பகுதியை வசந்தராஜன் என்பவன் ஆண்டு வந்தான். அவனது இஷ்ட தெய்வமான நரசிம்மருக்கு ஒரு கோவில் கட்ட தீர்மானித்து, அதற்கான பணிகளில் ஈடுபட்டான். ஒரு யோசனைப்படி, பெரிய யாகம் ஒன்றை செய்ய முற்பட்டான்.
அந்த யாகத்தை தடுத்து, வசந்தராஜனுக்கு பலவிதமான தொல்லைகளை கொடுத்து வந்தான் பரிகலாசுரன் எனும் அசுரன். இந்த அசுரன், சிவபெருமான் திரிபுரம் எரித்த போது, அங்கிருந்து தப்பி ஓடி வந்து, இங்கு ஒளிந்து கொண்டவன். குதிரை முகமும் மனித உடலும் கொண்டதால், பரிகலாசுரன் என்று பெயர் பெற்றான்.
ஒரு புதருக்குள் மறைந்து உட்கார்ந்து கொண்டு, நரசிம்மரை தியானித்து ஜபம் பண்ணிக்கொண்டிருந்த வசந்தராஜனை, தனது கோடாரியால் தாக்க சென்ற பரிகலாசுரனை, புதருக்குள்ளிருந்து புறப்பட்ட நரசிம்மர் சம்ஹாரம் செய்தார்.
அசுரனை அழித்த பிறகு, இறந்தவர்களை உயிர்ப்பித்து தந்த பெருமான், அரசனுக்கு சேவை சாதித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அரசனும் தனது திட்டப்படி, இந்த ஆலயத்தை நிர்மாணித்தான் என ஸ்தல வரலாறு.
வாமதேவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்ரஹம் இது.
மூலவர்: ஸ்ரீ லட்சுமிநரசிம்மர், தாயார்: கனகவல்லி.
மூலஸ்தானத்தின் மூலவரான ஸ்ரீ லட்சுமிநரசிம்மர், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். திருமுகத்தில் மந்தஹாஸம் நிலவ, சாந்தமே உருவாக, அகன்று விரிந்த கண்களுடன், நீண்டு வளைந்த மீசையுடனும் காட்சி தருகின்றார்.
மேற்கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ் இடது கரம் மடியிலமர்ந்த மஹாலட்சுமியை அணைத்தவாறும், கீழ் வலது கரம் ஆசி வழங்கியவாறும் அற்புதமான கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
உற்சவ நரசிம்மர் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
வலச்சுற்றின் தென்மேற்கில் தனி சந்நிதி கொண்டுள்ள தாயார் கனகவல்லியை சேவிக்கலாம்.
நேர் எதிரே வீர ஆஞ்சநேயரும், அஞ்சலிஹஸ்த பக்த ஆஞ்சநேயரும் கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளனர்.
நவதான்யங்களை சந்நிதி முன்பாக பரப்பி பிரார்த்திக்கின்றனர். வரதராஜப் பெருமாள், விஷ்வக்சேனர் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.
மூலவர்க்கு பிரதி தினமும் காலை 11 மணி அளவில் திருமஞ்சனம் நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.