அருள்மிகு ராமநாதீஸ்வரர் திருக்கோவில் (பல்லகச்சேரி)
God Name : ராமநாதீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
ஜம்புகாசுரன் எனும் அசுரன் செய்த கடுந்தவத்தால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் பல உயிர்கள் மடிந்தன. முனிவர்களும் குழந்தைகளும் தங்களை காப்பாற்ற வேண்டி, ராமரிடம் முறையிட்டனர். ஸ்ரீ ராமரும், பிரயோக சக்கரத்துடன் கூடிய விஷ்ணுவாக தோன்றி அவனை சம்ஹாரம் செய்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அசுரனைக் கொன்ற தோஷம் நீங்க, லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ராமர் வழிபட்டதால் மூலவருக்கு ராமநாதீஸ்வரர் என்ற பெயர் வந்தது.
பல்லக்கு போன்ற வடிவில் பெரிய ஏரி ஒன்று இருப்பதால், இவ்வூருக்கு பல்லகச்சேரி என பெயர் வந்தது.
மூலவர்: ராமநாதீஸ்வரர், அம்பாள்: தீர்த்த நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ ராமநாதீஸ்வரர். அம்பாள் தீர்த்தநாயகி மிகுந்த வரப்பிரசாதியாகப் போற்றப்படுகிறாள்.
உளி கொண்டு செதுக்காத நர்த்தன விநாயகர், ஆண்டிக் கோலத்தில் முருகன், சம்ஹாரக் கோலத்தில் ராமர் மற்றும் கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அற்புதம். ஜம்புகாசுரன் தவம் செய்யும் காட்சி, விஷ்ணு பிரயோக சக்கரத்துடன் இருக்கும் காட்சி ஆகிய சிற்பங்கள் மிகவும் அழகானவை.
அருகேயுள்ள பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி தேவியர்களுடன் வரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கின்றார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.