அருள்மிகு தாண்டவனேஸ்வரர் திருக்கோவில் (மூக்கனூர்)
God Name : தாண்டவனேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
விழுப்புரம் மாவட்டத்து பஞ்சபூத ஸ்தலங்களுள் ஒன்றாக கருதப்படுகின்றது. மாடக் கோவில்களில் ஒன்று. முசுகுந்த சக்ரவர்த்தி நிர்மாணித்த கோவில். யாகம் செய்த போது யாக குண்டத்தின் அக்னி ஜ்வாலையில் நாக ஸ்வரூபமும், சிவனுடன் கூடிய நாகமும், ஆவுடையார் கோமுகமும் தோன்றியதாக கூறுகின்றனர். (படம் பிடித்துள்ளனர்)
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் தாண்டவனேஸ்வரர். பாணலிங்கத்தில் இரு கண்களும், முக அமைப்பும் பொருத்தியிருப்பது அழகாக இருக்கின்றது. உயரமான மேடையில் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். தயிர் அபிஷேகம் செய்யும்போது சிவலிங்கத்தின் மீது ஒரு நாகம் இறங்குவதைப் போல் இருக்கும். தேன் அபிஷேகத்தில் நடனமாடும் நடராஜரைக் காணலாம். ஸ்வர்ண அபிஷேகத்தில் தங்கமாக ஜொலிப்பார், சில சமயங்களில் பச்சை நிறமாகவும் இருப்பார். இப்படி ஒவ்வொரு அபிஷேகத்தின்போதும் ஒவ்வொரு விதமாக தோன்றும் அதிசய லிங்கம். அர்த்த மண்டபத்தருகே தனி சந்நிதி கொண்டு எழுந்தருளியுள்ளார் சிவகாமசுந்தரி. வினைகளை வேரறுக்கும் விநாயகர், ஷண்முகர், அஷ்டபுஜ துர்க்கை, சிவதுர்க்கை, காலபைரவர் என அனேக மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.