அருள்மிகு ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் (கூகையூர்)
God Name : ஸ்வர்ணபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
விழுப்புரம்
Call : +91-
திருமூல சித்தர் என்பவர் இங்குள்ள குகையில் வசித்து தவம் மேற்கொண்டார் என்றும், அதனால் குகையூர் என அழைக்கப்பட்டு காலப்போக்கில் கூகையூர் என்றானதாகவும் கூறப்படுகின்றது.
சுவேத நதி எனப்படும் வெள்ளாற்றின் வடகரையில் அமைந்துள்ளது கூகையூர். சித்தநாதர் கோவில் எனப்படும் பஞ்சாட்சரநாதர் கோவில், காரியாம்புரீஸ்வரர் கோவில், சோழீஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில் ஆகிய கோவில்களையும் கொண்ட ஸ்தலம் என்பதால், பஞ்ச பூத சிவஸ்தலங்களுள் ஒன்று என்ற சிறப்பைப் பெற்றது.
ஒரு ஸ்தபதியின் மகனை பாம்பு கடித்து இறந்துவிட, இவ்விறைவன் சித்தராக வந்து சிறுவனுக்கு உயிர் கொடுத்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேவார வைப்புத்தலம்.
மூலவர்: சொர்ணபுரீஸ்வரர், அம்பாள்: ஸ்வர்ணாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சொர்ணபுரீஸ்வரர். உயரமான பாணம் கொண்டும் வட்ட வடிவ ஆவுடையாருடனும் காட்சி தருகின்றார். சுயம்பு லிங்க வடிவினர். பொன் பரப்பிய ஈஸ்வரமுடைய நாயனார் என்று அழைக்கப்படுகிறார். வசிஷ்டர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.
அழகிய நந்தி மண்டபமும் அதன் தூண்களும் சிற்ப வேலைப்பாடுகளின் சிறப்பைப் பெற்றவை. தூண்களுடன் ஒட்டுத் தூண்கள் உள்ளன. இவற்றை ஏழிசைத் தூண்கள் என்று அழைக்கின்றனர். ஒவ்வொரு தூணையும் தட்டினால் வெவ்வேறு இசை எழும்பும்.
நந்திக்கு வலதுபுறமாக உள்ள சந்நிதியில் அம்பாள் ஸ்வர்ணாம்பிகை எழுந்தருளியுள்ளார். இந்த சந்நிதியின் முன்பாக, குபேர ஸ்தானம் எனப்படும் மண்டபத்தின் மேல் விதானம் அற்புதமான சிற்பங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. கூகையூர் கொடுங்கை அழகு எனும் சிறப்பைப் பெற்றது.
வலச்சுற்றில் கற்பக விநாயகர், முருகப் பெருமான், சொக்கநாதர், பைரவர், பிரதோஷ நாயகர், சண்டிகேஸ்வரர், ஜேஷ்டா தேவி ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
கூகையூரின் காவல் தெய்வமான அய்யனார், அருகேயுள்ள வீரபயங்கரம் எனும் ஊரில் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.