அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோவில் (அம்மையகரம்)

God Name : சொர்ணபுரீஸ்வரர் எனப்படும் பொன்பரப்பிநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

சித்தர்களின் தலைமை குருவான ஸ்ரீ காகபுஜண்டர் இத்தலத்தில் பதினாறு ஆண்டுகள் தவமிருந்து அதன் பயனாக பதினாறு முகங்கள் கொண்ட சிவனை தரிசிக்கும் பாக்யம் பெற்றார். தனக்கு கிடைக்கப் பெற்ற தரிசனம் உலக மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ஷோடஸ லிங்கத்தை ஸ்தாபனம் செய்தார். தென்பொன்பரப்பியை ஆண்ட வானகோவராயன் எனும் சிற்றரசன் இந்த ஷோடஸ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து இங்கு ஆலயம் எழுப்பியதாக வரலாறு. ஸ்ரீ காகபுஜண்டரும் அவரது மனைவி பகுளா தேவியும் ஜீவ சமாதி அடைந்தனர். அந்த ஜீவ சமாதி ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ளது.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சொர்ணபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சூரிய காந்த தன்மை கொண்ட ஷோடஸ லிங்கம். பதினாறு முகங்கள் (பட்டைகள்) கொண்ட அழகிய திருமேனி. திருமேனியில் வெண்கல சத்தம் வருவதாகக் கூறுவர். இவருக்கு பொன்பரப்பிநாதர் என்ற பெயரும் உண்டு. காகபுஜண்டர் பிரதிஷ்டை செய்த லிங்கம். லிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் செய்தால் பதினாறு கோடுகளாகத் தனித்தனியாகப் பிரிந்து பீடம் வந்து சேரும். கிழக்கு பார்த்தபடி நின்ற கோலத்தில் அம்பாள் சொர்ணாம்பிகை தரிசனம் தருகின்றாள். அழகான திருவுருவம். நந்தியம்பெருமான் தலையை சாய்த்திராமல் நேராக சிவனை பார்த்தபடி பாலநந்தியாகக் காணப்படுகின்றார். ஆவணி/பங்குனி மாதங்களில், காலை வேளைகளில், சூரியனின் ஒளிக்கதிர்கள் நந்தியின் இரண்டு கொம்புகளுக்கு இடையே ஊடுருவிச் சென்று, மூலவர் மீது படர்ந்து, மீண்டும் நந்தியிடமே வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். எட்டடி உயரம் கொண்ட வள்ளி-தெய்வயானை தேவியர்கள் திருவுருவங்களுடன் மயில் மீதமர்ந்த முருகனின் திருமேனி மிகவும் அழகாக இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.