அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் (ரிஷிவந்தியம்)

God Name : அர்த்தநாரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

உமையன்னையை வழிபடாமல், சிவபெருமானை மட்டும் வழிபடும் பிருங்கி முனிவர்க்கு அவருடைய தவறை உணர்த்த, தனது உடலின் இட பாகத்தைப் பார்வதிக்குத் தந்தார். லிங்க வடிவில் உள்ள ஸ்தலம் ரிஷிவந்தியம். சாவித்திரி மந்திரத்தின் நுட்பங்களை அறிந்து கொள்ள விரும்பிய இந்திரன், ரிஷிவந்தியத்தில் தங்கி, அம்பிகைக்கும் குடம் குடமாகப் பால் அபிஷேகம் செய்தான். அவனைச் சோதிக்க எண்ணிய பார்வதி, பால்குடத்தை மறைத்து வைத்தாள். வருத்தம் கொண்ட இந்திரனைச் சமாதானம் செய்து, மாதொருபாகனாக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், இருவருக்கும் சேர்த்துச் செய்த பலன் கிடைக்கும் எனக் கூறினாள் பார்வதி. சாவித்திரி மந்திர உபதேசமும் செய்தாள். இந்திரன் தொடர்ந்து பால் அபிஷேகம் செய்து வந்ததில் மகிழ்வுற்ற இறைவன் மாதொருபாகனாகத் தரிசனம் தந்தருளினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. அகஸ்தியருக்குத் திருமணக் கோலமும், மாதொருபாகன் வடிவமும் காட்டியருளிய ஸ்தலம் இது. பூமிமாதேவியின் ஹிருதயகமலமாக விளங்கும் ஸ்தலம்.
மூலவர்: அர்த்தநாரீஸ்வரர், அம்பாள்: முத்தாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக, சுயம்புவாக எழுந்தருளி அருள் புரிகின்றார் அர்த்தநாரீஸ்வரர். சூரியகாந்தத் தன்மையுள்ள ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட மூர்த்தம். வெட்டுப்பட்ட கீறல் ஒன்றும் மூலவரின் திருமேனியில் காணலாம். மூலவர்க்கு தேனபிஷேகம் செய்தால், ஒளி வடிவில் அன்னையின் உருவத்தையும் அதில் தரிசிக்கலாம். அம்பாள் முத்தாம்பிகை தனி சந்நிதி கொண்டுள்ளார். கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் மிகவும் அழகாக இருக்கின்றன. அகத்திய லிங்கம், பிரம்ம லிங்கம், காசி விஸ்வநாதர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பஞ்சலோக விக்ரஹங்கள் பேரெழில் கொண்டவை. அர்த்தநாரீஸ்வரரின் சுதைச் சிற்பம் வண்ணமயமாக அழகாக இருக்கின்றது. இந்திரன் பால் அபிஷேகம் செய்வது, லிங்கத்திலிருந்து வெளிப்பட்ட சிவபெருமான், அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தந்தது போன்றவற்றை சுதைச் சிற்பங்களாக வடித்துள்ளனர். சிவகண கோபுரத்தின் தென்பாகத்தின் உட்பகுதியில் கோவிலின் காவல் தெய்வமான முனீஸ்வரன் மேற்கு நோக்கி தரிசனம் தருகின்றார். செவ்வாய், வெள்ளி தினங்களில் அபிஷேக ஆராதனைகள் செய்து, வடைமாலை சாத்துகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.