அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவில் (திருப்பாற்கடல்)
God Name : ரங்கநாதர், ஸ்ரீ ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
செங்கல்பட்டு
Call : +91-
சரஸ்வதியின் துணை இல்லாமல், பிரம்மா காஞ்சிபுரத்தில் செய்த யாகத்தை அழிக்க, சரஸ்வதி வேகவதி நதியாக உருவெடுத்து ஓடி வந்தாள். பின்னர் திருமாலின் அருளால் சரஸ்வதியின் கோபம் தணிந்து, சரஸ்வதி பணிந்தாள் - யாகமும் பூர்த்தியானது.
சரஸ்வதி யாகத்தைத் தடுக்க செய்த முதல் முயற்சி பள்ளிக்கொண்டாவில், இரண்டாவது இவ்வூரான திருப்பாற்கடலில், மூன்றாவதாக முயன்று தோல்வி கண்ட இடமே திருவெக்கா என ஸ்தல புராணம் கூறுகிறது.
அதே கோலத்தில் க்ஷீராப்திநாதனாக திருமால் இங்கு பக்தர்களுக்குக் காட்சி தருவதால், இவ்வூரை திருப்பாற்கடல் என்கின்றனர்.
கலியுகத்து மக்களின் பாவக்கணக்குகளை எடுத்துக்கூறும் சித்ரகுப்தனுக்கு கபால சூடு ஏற்பட்டு, அதைத் தணிக்க, பிரம்மா கூறிய யோசனைப்படி, இத்தலத்திற்கு வந்து, அத்தி சமித்துக்களைக் கொண்டு ஹோமம் செய்து, ரங்கநாதரை வழிபட்டு, அவர் அருளால் நோய் நீங்கப் பெற்றதாக ஸ்தல புராணம் தெரிவிக்கின்றது.
ரங்கநாதர் மற்றும் ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள் சேவை சாதிக்கும் இரட்டைக்கோவில் என்பார்கள்.
மூலவர்: ரங்கநாதன், தாயார்: ரங்கநாயகி. மற்றொரு மூலவர்: ஸ்ரீ ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள், தாயார்: அலர்மேல் மங்கா.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ ரங்கநாதர் க்ஷீராப்திநாதனாக சேவை சாதிக்கின்றார். ஆதிசேஷன் மேல் சயனக் கோலம்.
தலைக்கு மரக்கால் வைத்துள்ளார். ஸ்ரீ தேவி, பூதேவி உடன் உள்ளனர். நாபிக்கமலத்தில் பிரம்மா காட்சி தருகிறார்.
மூலவரின் திருமேனி அத்தி மரத்தினால் உருவாக்கப்பட்டது என்பர்.
இவரை தரிசிப்பவர்களுக்கு சித்ரகுப்தன் எழுதி வைத்த பாவக்கணக்கு நீங்கிவிடும் என ஸ்வாமி தேசிகன் 'மெய்விரத மான்மியம்' எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
தாயார் ரங்கநாயகியை தனி சந்நிதியில் சேவிக்கலாம். தாயாருக்கு பால் அபிஷேகம் செய்து, சன்னிதியின் படியை நெய்யால் மெழுகினால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும், தேன் அபிஷேகம் செய்தால் திருமணத் தடை நீங்கும் என்றும் பட்டாச்சார்யார் தெரிவிக்கின்றார்.
ஸ்ரீ பக்த ஹனுமான் மிக அழகான திருமேனியுடன் காட்சி தருகிறார். ம்ருத்யு தோஷங்களை நீக்க வல்லவர்.
இவருக்கு 11 கூஷ்மாண்டம் (பூசணிக்காய்கள்) மாலை செய்து சாற்றி வழிபடும் பக்தர்கள் அநேகம்.
திருமணமாகாத ஆண்கள் 116 விரலி மஞ்சள்களை மாலையாக்கி ரங்கநாதருக்கு அணிவித்தால் திருமணத்தடை நீங்கும் என பட்டாச்சார்யார் கூறுகிறார்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார்.
பீடத்தின் மீது நின்ற கோலம். புண்டரீக மகரிஷிக்கு பிரத்யட்சமானதாக ஐதீகம்.
தாயார் அலர்மேல் மங்கா தரிசனம் தருகிறார். திருவடிகளில் ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்துள்ளனர்.
கோபுரத்தில் கஜேந்திர வரதர், தட்சிணாமூர்த்தி, லட்சுமி நாராயணன், பிரம்மா ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.