அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் (திருவேற்காடு)

God Name : வேதபுரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

காஞ்சிபுரம்

Call : +91-

பிரளயம் முடிந்ததும், இறைவன் முதலில் வெள்ளத்தை வற்றச் செய்து, நான்கு வேதங்களையும் இத்தலத்தில் வெள்வேல் மரங்களாக வடிவெடுக்கும்படி பணித்தார். அதன்படி நான்கு வேதங்களும் வெள்வேல் மரங்களாக நின்று இவ்விறைவனை வழிபட்டன. இதனால் இவ்விறைவனுக்கு வேதபுரீஸ்வரர் என்று பெயர் வந்தது. திருமால் தான் தவறவிட்ட வலம்புரி சங்கை இவ்விறைவனை வழிபட்டுப் பெற்றார். பிரம்மனைச் சிறை பிடித்த தோஷம் விலக, முருகப்பெருமான் வழிபட்ட தலம். பிருகு முனிவரின் சாபம் கொண்ட திருமால், ஜமதக்னி-ரேணுகை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்து பரசுராமராக வளர்ந்து, இத்தலம் வந்து இவ்விறைவனை வழிபட்டுள்ளார். 63 நாயன்மார்களுள் மூர்க்க நாயனார் அவதரித்த தலம். விஷம் தீண்டா பதி என இத்தலத்திற்குப் பெருமை உண்டு.
மூலவர்: வேதபுரீஸ்வரர், அம்பாள்: பாலாம்பிகை. மூலஸ்தானத்தில் வேதபுரீஸ்வரர் சிவலிங்க வடிவில் எழுந்தருளி அருள் புரிகின்றார். வட்ட வடிவ ஆவுடையாருடன், கம்பீரமான தோற்றத்துடன் சுயம்பு மூர்த்தமாக அருள்பாலிக்கிறார். ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது. இவருக்கு வேற்காட்டீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. கிழக்கு நோக்கிய சந்நிதி. கஜப்பிருஷ்ட விமான அமைப்புடன் திகழ்கிறது. சிவலிங்கத் திருமேனிக்குப் பின்னால், அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியதாக ஐதீகம். வினை தீர்க்கும் விநாயகர் உடன் எழுந்தருளியுள்ளார். கருவறையை நோக்கியபடி சூரியனும், அருகே அகத்தியரும் காணப்படுகின்றனர். வேதபுரீஸ்வரரைச் சுற்றிலும் - அக்னி, யம, நிருதி, வருண, வாயு, குபேர, இந்திர லிங்கங்கள் உள்ளன. வெள்வேல் மரத்தடியில் முருகன் பூஜித்த லிங்கத்தைக் காணலாம். அன்னை பாலாம்பிகை மிகுந்த வரப்பிரசாதி. வெட்கத்தில் முகம் சாய்த்த கோலத்தில் வீற்றிருக்கிறாள். முருகனுக்கு வேல் தந்து ஆசிர்வதித்ததால், வேல் நெடுங்கண்ணி என்றும் அழைக்கப்படுகிறாள். பிரகார வலச்சுற்றில், ஒரு தூணில் கருமாரியின் வடிவம் மழு உருவமாகக் காணப்படுகிறது. ஞானசம்பந்தருக்குக் காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. பலராமர் பூஜித்த பலராமேசர், பரசுராமர் பூஜித்த பரசுராமேசுவரர், காசி விஸ்வநாதர் ஆகிய லிங்க வடிவங்களைத் தரிசிக்கலாம். தாமரைப்பூ வடிவில் எண்கோண மேடையில் நவகிரகங்களைக் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.