அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (புதுச்சேரி)

God Name : வரதராஜப் பெருமாள், உற்சவர்: தேவாதிராஜன்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

விழுப்புரம்

Call : +91-

நரசிங்கரை ஆராதன மூர்த்தியாகக் கொண்டு ஆதியில் சிறிய கோவிலாக இருந்ததாம். நாளடைவில் பெரியதாக வளர்ந்து பல்வேறு மூர்த்தங்களுடன் திகழ்கிறது என கூறுகின்றனர். தற்போது நரசிங்கரின் திருவுருவம் வெங்கடாசலபதியின் பின்புறம் உள்ளது. ஆதி மூர்த்தி தாருவால் (மரத்தால்) உருவானவர். திருவஹிந்திரபுரத்து பெருமாளின் அபிமான ஸ்தலம் என கூறுகின்றனர். இங்குள்ள சந்திர புஷ்கரிணி தீர்த்தம் 82 ஊற்றுக்களுடன் உள்ளது. கந்தக தீர்த்தம் என்பதால் பச்சை நிறமாக இருக்கின்றது.
மூலவர்: வரதராஜப் பெருமாள், தாயார்: பெருந்தேவி, உற்சவர்: தேவாதிராஜன். மூலஸ்தானத்தில் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் மூலவராக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. நின்ற திருக்கோலம். உற்சவர் தேவாதிராஜன் அற்புதமான அழகுடன் தரிசனம் தருகின்றார். தாயார் பெருந்தேவி தனி சந்நிதி கொண்டுள்ளார். ஸ்ரீ ராமர், சீதா பிராட்டி, நவநீத கிருஷ்ணன், சந்தான கோபாலன், சுந்தர ஆஞ்சநேயர் ஆகிய விக்ரஹங்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. 108 திவ்ய தேசத்து திருவுருவங்களை, சுதை வடிவங்களாக கண்ணாடி அறையில் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.