அருள்மிகு ஆயிரங்காளியம்மன் திருக்கோவில் (திருமலைராயன்பட்டினம்)
God Name : பொருந்தாது
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
திருமலைராயன் ஆற்றில் மிதந்து வந்த ஒரு பெட்டிக்குள், தனித்தனி உறுப்புகளாக இருந்ததை பொருத்திப் பார்த்ததில் கிடைத்த அழகிய சிலை. பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த ஓலைச்சுவடியில் குறிப்பிட்டிருந்தபடி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பெட்டியைத் திறந்து, அதிலுள்ள உறுப்புகளை ஒன்று சேர்த்து, விழா எடுத்து, மக்கள் தரிசிக்க அலங்கரித்து வைப்பார்கள். அந்த ஓலைச்சுவடியில் பூஜா முறைகள் யாவும் வரையறுத்துக் குறிப்பிடப்பட்டிருந்தனவாம்.
கருவறையிலிருந்து அம்மனின் திருமார்பு வரை நைவேத்ய பொருட்களை மலை போல் குவித்து வைத்து பூஜை செய்வார்கள். தொடர்ந்து அர்ச்சனைகள் நடைபெறும். மூன்றாம் நாள் காளியம்மன் மீண்டும் பெட்டிக்குள் போய்விடுவாள்.
1997, 2002, 2007, 2012 ஆகிய வருடங்களில் தரிசனம் தந்துள்ள காளியம்மன் இனி 2017-ல் தரிசனம் தருவாள்.
பிரதான கருவறையில் ஆயிரங்காளியம்மன் எனப்படும் காளி தேவியை தரிசிக்கலாம். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, அதுவும் மூன்றே இரவுகள், தரிசனம் தரும் அதிசயக் காளி. மரத்தால் உருவாக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்ட அழகிய பெரிய திருமேனியும், பெரிய விழிகளும், வக்ரதந்தம் ஆகியன கொண்டும், கம்பீரமான தோற்றத்தில் காட்சி தரும் அதிசயக் காளி.
மலர் மாலைகள், மஞ்சள், பழங்கள், பட்சணங்கள் என எல்லாமே ஆயிரம் ஆயிரமாக படைக்கப்படுவதால் ஆயிரங்காளியம்மன் எனும் பெயர் பெற்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.