அருள்மிகு சரநாராயணப் பெருமாள் திருக்கோவில் (திருவதிகை)
God Name : மூலவர்: சரநாராயணர் - உற்சவர்: பிரஹ்லாத வரதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
திரிபுராந்தகப் போரில், சிவபெருமானது கரத்தில் அம்பாக திகழ்ந்த அதி உக்கிர நரசிம்மர், திரிபுர தகனம் முடிந்ததும், களைப்பைப் போக்கிக் கொள்ள, இங்கு சயனக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். இவருக்கு க்ஷேத்ர நிவாசன் என்ற திருநாமமும் உண்டு.
வைகாசி மாதம், வீரட்டேஸ்வர ஆலயத்தின் பெருவிழாவின்போது, சரநாராயணப் பெருமாள் கருட வாகனத்தில் அவ்வாலயம் சென்று, தேர்சக்கரத்தின் அருகில் நிற்பார். இவர் மீது, சிவபெருமானின் சந்திரகணை சார்த்தப்பட்டு, அதில் மந்திரபூர்வமாக எழுந்தருளச் செய்கின்றனர். பின்னர் சந்திரகணை, சிவபெருமானின் கரத்தில் வைக்கப்படுகிறது.
பிறகு திரிபுர தகன ஐதீகத் திருவிழா நடைபெறும். இருவருக்கும் ஏக கால தீபாராதனை நடைபெறும்.
பெருமாள் - மூலவர்: சரநாராயணர், உற்சவர்: பிரஹ்லாத வரதர்.
தாயார் - மூலவர்: ஹேமாம்புஜவல்லி, உற்சவர்: செங்கமலவல்லி.
மூலஸ்தானத்தில் சரநாராயணப் பெருமாள் கிழக்கே திருமுகம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில், நெடிய வடிவில் மூலவராக எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ தேவியும், மார்க்கண்டேய முனிவரும் இருபுறமும் உள்ளனர்.
சிவபெருமானின் கரத்தில் சரமாக நின்றதால் இவருக்கு சரநாராயணர் எனும் திருநாமம் ஏற்பட்டது.
உற்சவராக பிரஹ்லாத வரதர் சேவை சாதிக்கிறார்.
மூலவராக ஹேமாம்புஜவல்லித் தாயாரும், உற்சவராக செங்கமலவல்லித் தாயாரும் சேவை சாதிக்கின்றனர்.
மகாமண்டபத்தின் வடக்கில், தெற்கு பார்த்த சந்நிதியில், நரசிம்மர் சயனக் கோலத்தில் காட்சி தருகிறார்.
இவரை போகசயன நரசிம்மர் என்று கூறுவர். இது போன்ற சயனக்கோல நரசிம்மரை, வேறு எங்கும் தரிசித்ததில்லை.
'உறங்கும் சீரிய சிங்கம்' என திருப்பாவை பாசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரகார வலச்சுற்றில் ஆஞ்சநேயர், ரகுமாயி-பாண்டுரங்கன் ஆகிய சுதைச் சிற்பங்களைக் காணலாம். கருடன், கைகட்டி பெருமாளுக்கு மரியாதை செய்யும் கோலத்தில் இருக்கிறார்.
ஆண்டாளின் திருப்பாவையில் குறிப்பிடப்பட்டுள்ள ஸ்தலம் இது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.