அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோவில் (திருத்துறையூர்)
God Name : சிஷ்டகுருநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
மெய்கண்ட நாயனாரின் முதன்மை மாணாக்கனான அருணந்தி சிவம் அவதரித்து பேறு பெற்ற ஸ்தலம்.
தென்பெண்ணையாறு வடதிசை நோக்கி ஓடும் ஸ்தலம்.
சுந்தரருக்கு காட்சி தந்தருளிய சிவபெருமான், கருவறையின் விமானத்தில் உள்ளார். இறைவனை தரிசிக்க முடியாது போனதால் ஏமாற்றமும் மன வருத்தமும் கொண்ட சுந்தரருக்கு, வயோதிகர் வடிவில் வந்து வழிகாட்டி மறைந்தார் இறைவன். கோபுரத்தில் அம்மையப்பராக காட்சி தந்து அருளாசி வழங்கினார் என ஸ்தல வரலாறு. சுந்தரரை தடுத்தாட்கொண்ட சந்நிதி குளத்தினருகே இருக்கின்றது.
மூலவர்: சிஷ்டகுருநாதர், அம்பாள்: சிவலோக நாயகி
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சிஷ்டகுருநாதர். தேஜோரூபமாக தரிசனம் தருகின்றார். இவருக்கு தவநெறி அப்பர், துறையூர்நாதர், பசுபதீஸ்வரர் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. சுந்தரருக்கு ஞான உபதேசம் செய்தமையால் சிஷ்டகுருநாதர் எனப் போற்றப்படுகின்றார். மேற்கு பார்த்த சந்நிதி. சித்திரை மாதம் 5 முதல் 10 வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமி மீது படர்ந்து பூஜிக்கின்றன.
வடக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் அம்பாள் சிவலோக நாயகி எழுந்தருளியுள்ளார். இவருக்கு பூங்கோதை என்ற பெயரும் உண்டு. அன்னை நிற்கும் பீடம் ஞான பீடம் மற்றும் சக்தி பீடமாக கருதப்படுகின்றது.
எதிரேயுள்ள சிறிய சந்நிதியில் அகஸ்தியர் பூஜித்த சிவலிங்கத்தை தரிசிக்கலாம். கன்னி மூலையில் ஆறு கரங்களுடன் ஆனந்த விநாயகர் நடனமாடும் கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பீமன் பூஜித்த லிங்கம், ராமர் பூஜித்த லிங்கம், வள்ளி-தெய்வயானை சமேத ஷண்முகக் கடவுள், வரதராஜப்பெருமாள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
தேவாரத் திருத்தலம்
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.