அருள்மிகு பாடலேஸ்வரர் திருக்கோவில் (கடலூர்)

God Name : பாடலேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

மாத்யந்தனர் எனும் முனிவர் சிவபூஜை செய்ய மலர்களைப் பறிப்பதற்கு ஏதுவாக, மரத்தைப் பற்றிக்கொண்டு ஏற, புலிக்கால் வேண்டுமெனப் பிரார்த்தித்து, புலிக்காலை வரமாகப் பெற்றார். இதனால் இவரை வியாக்ரபாதர் என்றும் புலிக்கால் முனிவர் என்றும் கூறுவர். புலிக்கால் முனிவர் வழிபட்ட ஸ்தலம் என்பதால் புலியூர் எனப்பட்டது. பாதிரி மரங்கள் மிகுந்த பகுதியானதால் பாதிரிப்புலியூர் என்றானது. ஞாழல் எனும் புலிநகக் கொன்றை மரங்கள் உள்ளதால் கடைஞாழல் எனும் புராதனப் பெயரும் உண்டு. சூரியனையும் சந்திரனையும் இரு கண்களாகக் கொண்ட சிவபெருமானின் கண்களை, பார்வதி தேவி தனது கைகளால் விளையாட்டாகப் பொத்தி மூடினார். க்ஷண நேரம் உலகில் இருள் சூழ்ந்தது. தனது செய்கைக்கு வருத்தம் தெரிவித்தாள் பார்வதி. அதற்குப் பரிகாரமாக பூலோகத்திலுள்ள சிவாலயங்கள் சென்று, சிவபூஜை செய்யப் போவதாகக் கூறினாள். "எந்த ஸ்தலத்தில் உனது இடது கண்ணும் இடது தோளும் துடிக்கின்றதோ அங்கு வந்து உன்னை மணப்பேன்" என்று கூறினார் சிவபெருமான். பல சிவாலயங்கள் சென்று சிவபூஜை செய்து மகிழ்ந்திருந்த பார்வதிக்கு, இந்த ஸ்தலம் வந்ததும் இடது கண்ணும் இடது தோளும் துடித்தது. உடனே இங்குள்ள பாதிரி விருட்சத்தின் கீழ் அமர்ந்து தவம் மேற்கொண்டாள். இவளது தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் ரிஷபவாகனராகக் காட்சி தந்து, அம்பிகையை இடப்பக்கமாக எழுந்தருளச் செய்து, அம்பிகை பூஜித்த லிங்கத்தினுள் மறைந்தார். பாதிரி மரம் நெட்டையாக வளரும் இயல்புடையதாக இருந்தாலும், அம்பிகை சிவபூஜை செய்வதற்காக நாற்புறமும் கிளைகளைப் பரப்பி, தழைத்து, குடை போல் நிழல் தந்ததால் 'தழைத்த பாதிரி' என அழைப்பர். அம்பிகை சிவபூஜைக்காக மலர்களைத் தேடி அலையாமலிருக்க, தன்னிடமே 12 விதமான பூக்களைப் பூக்க வைத்து, அம்பிகைக்கு உதவியதாம். இப்போது பட்டுப் போயிருந்தாலும் அதன் தெய்வீகத்தன்மை கருதி செப்புத் தகடு வேய்ந்து பாதுகாத்து வருகின்றனர். தருமசேனராக சமண மதத்திலிருந்து மாறி, சைவத்திற்கு வந்து, திருநாவுக்கரசரான பின்னர், பலவிதமான துன்பங்களுக்கு ஆளானார் அப்பர் பெருமான். அவரை மீண்டும் சமணத்திற்கு கொண்டுவர, சோற்றில் விஷம் வைத்துக் கொடுத்தனர், தப்பிப் பிழைத்தார். யானையால் இடறப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டார். யானை நாவரசரை வலம் வந்து வணங்கி வந்த வழியே சென்றது. சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் வைத்திருந்தனர். புதுப் பொலிவுடன் வெளிப்பட்டார். இப்படியாக ஒவ்வொரு சோதனையிலும் வெளிப்பட்டு சைவ சமயத்திற்குத் தொண்டாற்றினார் என வரலாறு. பெரிய கருங்கல் ஒன்றில் கட்டி, கடலில் தூக்கி வீசினார்கள். கல் மிதந்தது. "கற்றூணில் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே" எனப் பாடிக் கொண்டே மிதந்த கல் மீது அமர்ந்து அப்பர் பெருமான் கரை சேர்ந்தார். தெப்பமாக மிதந்து வந்து அப்பர் கரையேறிய இடம் 'கரை ஏறவிட்டான் குப்பம்' எனும் ஊர் அருகாமையில் உள்ளது. சித்தர் வடிவில் வந்து இறைவன் மக்களின் துன்பங்களை நீக்கியதாகக் கூறுவர். தேவாரத்திருத்தலம் - ஐந்து புலியூர்களில் ஒன்று.
மூலவர்: பாடலேஸ்வரர், அம்பாள்: பெரியநாயகி மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பாடலேஸ்வரர். உயரமான பாணத்துடன் கூடிய பெரிய திருமேனி. கவசமணிந்து தரிசனம் தருகின்றார். இவருக்கு தோன்றாத் துணை நாதன், கடைஞாழலுடைய பெருமான், சிவக்கொழுந்தீசன், கரை ஏற்றும் பிரான் ஆகிய பெயர்களும் உண்டு. சுயம்பு மூர்த்தம். பாதிரி மரத்திற்கு வடமொழியில் பாடலம் என்று பெயர். பாதிரி மரத்தடியில் இறைவன் எழுந்தருளி காட்சி தந்ததால் பாடலேஸ்வரர் எனப் பெயர் கொண்டார். கடலுக்குள் நாவுக்கரசர் மிதந்தபோது ரக்ஷித்ததால் தோன்றாத் துணை நாதர் என்றும், கல்லை மிதக்கச் செய்து கரையேற்றியதால் கரையேற்றும் பிரான் என்றும் பல விதமான திருநாமங்கள் உண்டு. அம்பாள் பிரஹந்நாயகி எனப்படும் பெரியநாயகி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றாள். பாதிரி மரத்தடியில் அரூபமாக இருந்து தவம் செய்ததால் அருந்தவநாயகி என்ற பெயரும் உண்டு. அம்மன் இருக்கும் பிரகாரத்தில் பராசக்தி சந்நிதி உள்ளது. நவராத்திரி தினங்களில் மட்டும் திறப்பதால் நவராத்திரி வாசல் என்பர். தனது அன்னையை பாதிரி மலர்களால் பூஜித்த கன்னி விநாயகரைக் காணலாம். பாசாங்குசம் போன்ற ஆயுதங்கள் ஏதுமின்றி, கரங்களில் பாதிரி மலர்கள் வைத்தபடி தரிசனம் தருகின்றார். சொன்னவாறு அறி விநாயகர் - ஸ்தல விநாயகராக எழுந்தருளியுள்ளார். பஞ்ச பிரகாரங்களைக் கொண்ட ஆலயம். வலச்சுற்றில் வியாக்ரபாத லிங்கம், அகஸ்திய லிங்கம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். நான்கு யுகங்களுக்கு ஒருவர் வீதம் பூஜித்த யுகமுனீஸ்வரரையும் தரிசிக்கலாம். வடக்கு சுற்றில் ஆதிபாதிரிமரம் கவசமிடப்பட்டு அதனையடுத்துள்ள சந்நிதியில் அருந்தவநாயகி எழுந்தருளியுள்ளார். ஜடாமுடியை அள்ளி முடித்து தவம் செய்யும் கோலத்தில் இருக்கின்றாள். நடராஜர் சபை, கால பைரவர், விஸ்வபிரம்மா ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம். சப்த கன்னியர்கள் தனிக்கோவில் கொண்டுள்ளனர். வெளிபிரகாரத்தில் அழகிய நந்தவனமும் சோலையுமாய் பசுமையாக உள்ளது. இதமான பூங்காற்று வீசுகின்றது. "மாசில் வீணையும்... மாலை மதியமும்..." எனத் தொடங்கும் பாடலை திருநாவுக்கரசர் இங்கு பாடியதாக குறிப்பு ஒன்று உள்ளது. தெற்கு சுற்றில் வலம் வருகையில் இரண்டு பாதிரி மரங்களும், வலம்புரி விநாயகரும், நாகப் பிரதிஷ்டைகளும் காணலாம். மூலவராக திருநாவுக்கரசர் உழவாரத்தை தோளில் சாத்தியபடி அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. உற்சவ மூர்த்தி அழகாக இருக்கின்றார். அம்மன் சந்நிதிக்குள் இருக்கும் பள்ளியறையில் ஸ்வாமி எழுந்தருளுவதுதான் பெரும்பாலான சிவாலயங்களில் நடைமுறை. ஆனால் இங்கு அம்பாள், சிவன் சந்நிதியில் உள்ள பள்ளியறைக்கு எழுந்தருளுகிறாள். மாத்யந்தனர் எனும் முனிவர் சிவபூஜை செய்ய மலர்களைப் பறிப்பதற்கு ஏதுவாக, மரத்தைப் பற்றிக் கொண்டு ஏற, புலிக்கால் வேண்டுமெனப் பிரார்த்தித்து, புலிக்காலை வரமாகப் பெற்றார். இதனால் இவரை வியாக்ரபாதர் என்றும் புலிக்கால் முனிவர் என்றும் கூறுவர். புலிக்கால் முனிவர் வழிபட்ட ஸ்தலம் என்பதால் புலியூர் எனப்பட்டது. பாதிரி மரங்கள் மிகுந்த பகுதியானதால் பாதிரிப்புலியூர் என்றானது. ஞாழல் எனும் புலிநகக் கொன்றை மரங்கள் உள்ளதால் கடைஞாழல் எனும் புராதனப் பெயரும் உண்டு. சூரியனையும் சந்திரனையும் இரு கண்களாகக் கொண்ட சிவபெருமானின் கண்களை, பார்வதி தேவி, தனது கைகளால் விளையாட்டாகப் பொத்தி மூடினார். க்ஷண நேரம் உலகில் இருள் சூழ்ந்தது. தனது செய்கைக்கு வருத்தம் தெரிவித்தாள் பார்வதி. அதற்குப் பரிகாரமாக பூலோகத்திலுள்ள சிவாலயங்கள் சென்று, சிவபூஜை செய்யப் போவதாகக் கூறினாள். "எந்த ஸ்தலத்தில் உனது இடது கண்ணும், இடது தோளும் துடிக்கின்றதோ அங்கு வந்து உன்னை மணப்பேன்" என்று கூறினார் சிவபெருமான். பல சிவாலயங்கள் சென்று சிவபூஜை செய்து மகிழ்ந்திருந்த பார்வதிக்கு, இந்த ஸ்தலம் வந்ததும் இடது கண்ணும், இடது தோளும் துடித்தது. உடனே இங்குள்ள பாதிரி விருட்சத்தின் கீழ் அமர்ந்து தவம் மேற்கொண்டாள். இவளது தவத்தினால் மகிழ்ந்த சிவபெருமான் ரிஷபவாகனராகக் காட்சி தந்து அம்பிகையை இடப்பக்கமாக எழுந்தருளச் செய்து அம்பிகை பூஜித்த லிங்கத்தினுள் மறைந்தார். பாதிரி மரம் நெட்டையாக வளரும் இயல்புடையதாக இருந்தாலும், அம்பிகை சிவபூஜை செய்வதற்காக நாற்புரமும் கிளைகளைப் பரப்பி, தழைத்து, குடை போல் நிழல் தந்ததால் தழைத்த பாதிரி என அழைப்பர். அம்பிகை சிவ பூஜைக்காக மலர்களைத் தேடி அலையாமலிருக்க, தன்னிடமே 12 விதமான பூக்களைப் பூக்க வைத்து, அம்பிகைக்கு உதவியதாம். இப்போது பட்டுப் போயிருந்தாலும் அதன் தெய்வீகத்தன்மை கருதி செப்புத் தகடு வேய்ந்து பாதுகாத்து வருகின்றனர். தருமசேனராக சமண மதத்திலிருந்து மாறி, சைவத்திற்கு வந்து, திருநாவுக்கரசரான பின்னர், பலவிதமான துன்பங்களுக்கு ஆளானார் அப்பர் பெருமான். அவரை மீண்டும் சமணத்திற்கு கொண்டுவர, சோற்றில் விஷம் வைத்துக் கொடுத்தனர், தப்பிப் பிழைத்தார். யானையால் இடறப்படவேண்டும் என ஆணையிடப்பட்டார். யானை நாவரசரை வலம் வந்து வணங்கி வந்த வழியே சென்றது. சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் வைத்திருந்தனர். புதுப் பொலிவுடன் வெளிப்பட்டார். இப்படியாக ஒவ்வொரு சோதனையிலும் வெளிப்பட்டு சைவ சமயத்திற்குத் தொண்டாற்றினார் என வரலாறு கூறுகிறது. பெரிய கருங்கல் ஒன்றில் கட்டி, கடலில் தூக்கி வீசினார்கள். கல் மிதந்தது. "கற்றூணில் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே" எனப் பாடிக் கொண்டே மிதந்த கல் மீது அமர்ந்து அப்பர் பெருமான் கரை சேர்ந்தார். தெப்பமாக மிதந்து வந்து அப்பர் கரையேறிய இடம் கரை ஏறவிட்டான் குப்பம் எனும் ஊர் அருகாமையில் உள்ளது. சித்தர் வடிவில் வந்து இறைவன் மக்களின் துன்பங்களை நீக்கியதாகக் கூறுவர். தேவாரத்திருத்தலம் - ஐந்து புலியூர்களில் ஒன்று கலைகளோடு (பெரும் சக்தியோடு) இருப்பதால், அம்பிகையே செல்வதாக ஐதீகம். பஞ்ச பிரகார வலம் செய்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.