அருள்மிகு ஹயக்ரீவப் பெருமான் திருக்கோவில் (திருவஹீந்திரபுரம் - ஓளஷத மலை)

God Name : ஹயக்ரீவப் பெருமான்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

ஹயக்ரீவர் புராண வரலாறு: முன்பொரு சமயம், அசுரவதம் முடித்த களைப்பில், ஸ்ரீமந் நாராயணன் - வில்லின் நாணினை தனது முகவாய்க்கட்டையில் சாய்த்து வைத்தபடி, நித்திரை கொண்டார். அவரை பார்க்க வந்த இந்திரன், அயர்ந்து தூங்கும் அவரை எழுப்ப, வில்லின் நாணினை அறுத்தான். அதன் பிரயோக சக்தியால் வில் தெறித்து, திருமாலின் தலை அறுந்து விட்டது. இதை எதிர்பாராத இந்திரன் பராசக்தியை வேண்டினான். இந்திரன் முன் பிரத்யட்சமான பராசக்தி குதிரை முகம் ஒன்றை, அறுபட்ட திருமால் கழுத்தில் பொருத்துமாறு பணித்தாள். ஹயக்ரீவ அவதாரம் கொண்டால், ஹயக்ரீவ அசுரனுக்கு முடிவு ஏற்படும் என்பதே நோக்கம். ஹயம் என்றால் குதிரை, க்ரீவம் என்றால் கழுத்து எனப் பொருள். அதாவது குதிரை முகத்தையும் மனித கழுத்தையும் கொண்ட ஹயக்ரீவன் எனும் அரக்கன், தன்னைப் போலவே குதிரை முகம் கொண்டவரால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என வரம் பெற்று, மமதை கொண்டு, அனைவரையும் இம்சித்து வந்தான். குதிரை முகமும் மனித உடலும் கொண்ட திருமேனியுடையவர் ஹயக்ரீவப் பெருமான். அசுரனை சம்ஹாரம் செய்து அவதார காரியத்தை முடித்துக் கொண்டார் என தேவி புராணம் கூறுகின்றது. பிரம்மாவிடமிருந்து நான்கு வேதங்களைப் பறித்துக் கொண்ட மது - கைடபர் எனும் இரண்டு அசுரர்களை பாதாள லோகம் சென்று சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு வந்தவர் ஹயக்ரீவர். ஸ்தல வரலாறு: பிரம்ம தேவனிடமிருந்து, நான்கு வேதங்களையும் பறித்துக் கொண்ட மது-கைடப ராக்ஷஸர்கள், அவற்றை பெண் குதிரைகளாக மாற்றி மறைத்து விட்டனர். பிரம்மா ஸ்ரீமன் நாராயணனிடம் முறையிட்டார். அவர்களை சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு வர புறப்பட்டார் நாராயணன். குதிரை முகமும் மனித உடலும் கொண்டு, ஹயக்ரீவராகப் புறப்பட்டு போய், அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டு வந்தார். இதனால் மறை மீட்ட பெருமான் எனும் திருநாமமும் உண்டு. லட்சுமி தேவியுடன் காட்சி தரும் ஹயக்ரீவர், எல்லோருக்கும் ஆனந்தத்தை தருபவர். கல்வி/கேள்விகளில் சிறந்து விளங்க இவரை வழிபடுகின்றனர். வேதாந்த தேசிகர் ஔஷத மலையில் ஓர் அரசமரத்தடியின் கீழ் அமர்ந்து கருட மந்திரத்தை உச்சரித்து வழிபட்டார். பிரத்யட்சமான கருட பகவான், ஹயக்ரீவ மூர்த்தி ஒன்றினையும் தந்து, ஹயக்ரீவ மந்திரத்தையும் அருளினார்.
மருத்துவ மூலிகைகள் (ஔஷதங்கள்) இருப்பதால் ஔஷதாசலம் எனப்படும் குன்றின் மீது 74 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மூலஸ்தானத்தில் ஹயக்ரீவப் பெருமான் கிழக்கு நோக்கி எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். மிகவும் அழகான திருவுருவம். ஹய என்றால் குதிரை எனப் பொருள். வெண்புரவியின் முகத்தை உடையவர் ஹயக்ரீவர். லட்சுமி தேவியை மடியில் இருத்தி அமர்ந்த கோலம். வேதாந்த தேசிகருக்கு கருடன் கொடுத்த ஹயக்ரீவரின் சிலை மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரகார வலச் சுற்றில் பள்ளிக் கொண்ட நாதர், ஸ்ரீ ராமர், ராஜகோபாலன், யோக நரசிம்மர், ஆண்டாள், பெரிய திருவடி, சிறிய திருவடி, ஆழ்வாராதிகள் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம். வலது பக்கம் தொடையில் லட்சுமியை அமர்த்தியபடி காட்சி தரும் லட்சுமி நரசிம்மரின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது. தேசிகர் தனி சந்நிதியில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.