அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோவில் (திருமாணிக்குழி)

God Name : வாமனபுரீஸ்வரர், மாணிக்க வரதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

'மாணி' என்றால் பிரம்மச்சாரி. மாணியாக அவதாரமெடுத்து, வாமன வடிவில் மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு வந்த திருமால், மூன்றடி பெற்றபின், சிவபக்தனான பலி சக்ரவர்த்தியை பாதாளத்தில் அழுத்தி, சிரஞ்சீவியாக இருக்கச் செய்துவிட்டு, அந்த தோஷம் விலக இங்கு லிங்கம் ஒன்றை ஸ்தாபித்து ஏகாந்த பூஜை செய்தார். இதற்கு இடையூறு ஏதும் இல்லாதிருக்க, பீமருத்ரரை காவலாக எழுந்தருளும்படி செய்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. மாணி வழிபட்ட ஸ்தலம் என்பதால் 'மாணிக்குழி' என்றானது. ஊழிப்பிரளயம் முடிந்து, அடுத்த சிருஷ்டி தொடங்க, இறைவனும் இறைவியும் ஒன்று சேர்ந்த அருள் வடிவம் இருக்கும் ஸ்தலம் இது. நிறைய எண்ணெய் இருந்தும், ஜ்வாலை அணையும் நிலையிலிருந்த ஒரு விளக்கின் எண்ணெயைக் குடிக்க வந்தது ஓர் எலி. அதற்கே தெரியாமல் திரியைத் தூண்டிவிட்டது. இதனால் விளக்கு மிக பிரகாசமாக எரிந்தது. இந்த புண்ணியத்தின் பயனாக, எலி அதன் மறு பிறவியில் அரசனாகப் பிறந்து, இவ்வாலயத்தைக் கட்டித் தந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது. இது ஒரு தேவாரத்திருத்தலம்.
மூலவர்: வாமனபுரீஸ்வரர், அம்பாள்: அம்புஜாட்சி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வாமனபுரீஸ்வரர். இவருக்கு மாணிக்க வரதர் என்றும் பெயர் உண்டு. இது சுயம்பு மூர்த்தம். சிறிய ஆவுடையாருடன் கூடிய குட்டையான பாணம். சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் அம்புஜாட்சி அழகு திருவுருவமாக தரிசனம் தருகின்றாள். இவளுக்கு மாணிக்கவல்லி, பங்கயக்கண்ணி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. இறைவனும் இறைவியும் ஐக்கியமானபடியால், மூலவர் சந்நிதி திரையிடப்பட்டுள்ளது. தீபாராதனையின்போது திரையை விலக்கி தரிசனம் காண்பிக்கின்றார்கள். 8 அடி உயரமும் 5 அடி அகலமும் கொண்ட நீல வண்ணத்திரை - பட்டு நூல் ஜிமிக்கிகள், மணிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. திரையில் ஏகாதச ருத்ரர்களுள் ஒருவரான பீமருத்ரரின் திருவுருவம் இருக்கின்றது. நான்கடி உயரமும் சிவப்பு வண்ணமும் கொண்ட அழகிய திருமேனி. சிரசில் ஜ்வாலா முடியுடனும், தோளில் சர்ப்ப மாலை அணிந்தும், புலித்தோலை உடுத்தியும், காலில் வீரக்கழல்களுடனும் காட்சி தருகின்றார். அஷ்டபுஜங்களில் கத்தி, கேடயம், மழு, வில், அம்பு, உலக்கை ஆகியன கொண்டுள்ளார். இவருக்குத்தான் முதல் தீபாராதனை மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறது. பின்னரே லிங்க மூர்த்தியை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.