அருள்மிகு நடராஜர் திருக்கோவில் (நெய்வேலி)
God Name : ஸ்ரீ நடராஜர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
மூலவர்: நடராஜர், அம்பாள்: சிவகாமி
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள நடராஜப் பெருமான் மிகவும் அழகான ஐம்பொன் சிலை. பத்தடி உயரமும், எட்டடி அகலமும், 2420 கிலோ எடையும் கொண்ட அபூர்வமான படைப்பு. உலகிலேயே மிகப் பெரிய திருமேனி என்று கூறுவர். பாதத்தின் கீழ் திருமூலர். இரண்டு பக்கங்களிலும் பதஞ்சலியும் வியாக்ரபாதரும் இருக்கின்றனர். மூலிகைகளால் உருவாக்கப்பட்ட திருமேனி என்றும், நடராஜரின் சபைகளுள் இது பளிங்கு சபை என்றும் கூறுகின்றனர்.
உடன் எழுந்தருளியுள்ள சிவகாமி அன்னை மிகுந்த வரப்பிரசாதி. ஏழடி உயரம் கொண்ட அழகிய திருமேனி.
தசபுஜ பைரவர், சனீஸ்வர பகவான் ஆகிய விசேஷ மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
இதற்குள்ளேயே திருத்தொண்டர் திருக்கோவில் தனிக்கோவிலாக இருக்கின்றது. இதனுள் 63 நாயன்மார்களும் எழுந்தருளியுள்ளனர். செம்பொன் சோதி நாதர், அறம் வளர்த்த நாயகி, அஷ்டபுஜ துர்க்கை போன்ற திருவுருவங்களை தரிசிக்கலாம். அபிஷேகத்தின்போது சிவலிங்கத் திருமேனியில் விபூதி பட்டைகளைப் போல மூன்று கோடுகளைக் காணலாம்.
(நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான கோவில்)
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.