அருள்மிகு பழமலைநாதர் திருக்கோவில் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)

God Name : மூலவர்: பழமலைநாதர் எனப்படும் முதுகுன்றநாதர், உற்சவ மூர்த்தி: விருத்தகிரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

'முதுகுன்றம்' எனும் வடமொழி சொல்லுக்கு 'முதுமையான' அல்லது 'பழைய மலை' என்று அர்த்தம். 'விருத்தா' - முதிய, 'அசலம்' - மலை. எனவே, 'விருத்தாச்சலம்' என்றால் 'பழைய மலை' எனப் பொருள். ஆதியில் நீரைப் படைத்த பிரம்மன், மண்ணுலகம் தோன்றியபோது மலை வடிவில் தோன்றினார். வேறு சில மலைகளைப் படைத்த பிரம்மன், அவற்றிற்கு இடம் இல்லையே என வருந்தினார். அப்போது, எல்லா மலைகளுக்கும் முதலாக தோன்றிய அம்மலை 'பழமலை' என விளங்கும் எனக் கூறி மறைந்தார். இந்த மலை பூமியில் அழுந்தியிருப்பதால் மானசீகமாகவே வழிபட வேண்டும். பூமியடியில் கற்பாறை பாளங்களாக காணப்படுகின்றது. இந்த மலை உலகிற்கு அச்சாணியாக இருந்து அதன் மேலே சிவலிங்கமாக இருப்பதாக ஐதீகம். இதனால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை பழமலைநாதர் என்கின்றனர். பழமலைநாதர், பெரியநாயகி என்றெல்லாம் பெயர்களைக் கொண்டிருப்பதால், கிழவன்-கிழவிகளைப் பாட முடியாது என, இவ்வாலயத்திற்கு வராமல் பயணத்தைத் தொடர்ந்தார் சுந்தரர். இவரது பாடலைக் கேட்க விரும்பிய முருகன், அவரை அனுப்பி வழிமறித்து, அழைத்து வரச் செய்தார். இளமையான தோற்றத்தில் காட்சி தந்து, பாட வைத்து, பாடலைக் கேட்டதாகவும் கூறுவர். இத்தலத்தில் சில நாட்கள் தங்கிய சுந்தரர், பொன் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பதிகம் பாடி, பன்னிராயிரம் பொன் பெற்றார். கிடைக்கப் பெற்ற பொற்காசுகளை திருவாரூரில் கிடைக்கும்படி அருள வேண்டும் என வேண்டினார். அவற்றை மணிமுத்தாற்றில் இட்டுச் சென்றால் ஆரூரில் கமலாலயக் குளத்தில் பெறலாம் எனக் கூறினார் இறைவன். திருவண்ணாமலையிலிருந்து இவ்வூருக்கு வந்த குரு நமச்சிவாயர், சுவாமியையும் அம்பாளையும் தரிசித்துவிட்டு, பசியோடு படுத்திருந்தார். அம்பிகையை வர்ணித்துப் பாடிய பதிகத்தில் 'பெரியநாயகி எனும் கிழத்தி' என்று முடித்தார். 'கிழத்தி என்று பாடினால், கிழத்தியால் எப்படி சோறு கொண்டு வர முடியும்?' எனக் கேட்டாள் அம்பிகை. 'அத்தன் இடத்தாளே.. முற்றா இளமுலை மேலார வடத்தாளே.. சோறு கொண்டு வா..' என்று பாடினார் குரு நமச்சிவாயம். உடனே அம்பிகை இளமங்கை நாயகியாக வந்து சோறு படைத்தாள் எனக் கூறுவர். விருத்தாச்சலத்தில் ஒருவர் இறக்க நேர்ந்தால், அவருடைய உயிரை இறைவன் தனது மடி மீது கிடத்தி, காதுகளில் பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசம் செய்வதாக ஐதீகம். முக்தி தரும் ஸ்தலம் என்பதால் மோட்சதீபம் ஏற்றுகின்றனர். காசியை விட 'வீசம் அதிகம் விருத்தகாசி' என்பர்.
மூலவர்: பழமலைநாதர் (முதுகுன்றநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்). உற்சவ மூர்த்தி: விருத்தகிரீஸ்வரர். அம்பாள்: பெரிய நாயகி (விருத்தாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார்). உற்சவ அம்பாள்: பாலாம்பிகை. மூலஸ்தானத்தில், பழமலைநாதர் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். வட்ட வடிவ ஆவுடையாருடன் கூடிய அழகான திருமேனி. இவருக்கு முதுகுன்றநாதர் என்ற பெயரும் உண்டு. அழகான உற்சவ மூர்த்தியான பெரிய நாயகர் எனப்படும் விருத்தகிரீஸ்வரரை தனி சந்நிதியில் தரிசிக்கலாம். வடக்கு கைலாசப் பிரகாரத்தில், பெரிய நாயகி அன்னை கிழக்கு நோக்கி தனி சந்நிதி கொண்டு தரிசனம் தருகிறார். அம்பிகையின் திருவிளையாடல்களைக் குறிக்கும் சிற்பங்களை மண்டபத்தில் காணலாம். இவருக்கு விருத்தாம்பிகை என்ற பெயரும் உண்டு. அம்பாள் பெரிய நாயகி, இளமை நாயகியாக வந்து குரு நமச்சிவாயருக்கு சோறு படைத்ததாக ஐதீகம். இளமை நாயகியார் எனப்படும் பாலாம்பிகையும், உற்சவ மூர்த்தியாக தனி சந்நிதி கொண்டுள்ளார். மிகவும் அழகான திருவுருவம். சைவ சமயத்தின் 28 ஆகமங்களை, முருகப்பெருமான் 28 லிங்கங்களாக பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார். வடமேற்கேயுள்ள தனி சந்நிதியில் இவற்றை தரிசிக்கலாம். இதனால் இக்கோவில் ஆகமக் கோவில் என்று பெயர் பெற்றது. காமிகேஸ்வரர், யோகேஸ்வரர், சிந்தியேஸ்வரர், காரணேஸ்வரர், அஜிதேஸ்வரர், தீபதேஸ்வரர், தட்சமேஸ்வரர், சகஸ்ரேஸ்வரர், அம்சுமானேஸ்வரர், சப்பிரபேதேஸ்வரர், விசயேஸ்வரர், விசுவாசேஸ்வரர், சுவயாம்பேஸ்வரர், அநலேஸ்வரர், வீரேஸ்வரர், ரவுரவேஸ்வரர், மகுடேஸ்வரர், விமலேஸ்வரர், சந்திர-ஞானேஸ்வரர், முகம்பிபேஸ்வரர், புரோத்கீதேஸ்வரர், லலிதேஸ்வரர், சித்தேஸ்வரர், சந்தானேஸ்வரர், சர்வோத்தமேஸ்வரர், பரமேஸ்வரர், கிரணேஸ்வரர், பாதுளேஸ்வரர் - ஆகிய 28 லிங்கங்கள். கைலாசப் பிரகாரத்தில், 18 அடி ஆழத்தில் சந்நிதி கொண்டுள்ள ஆழத்துப் பிள்ளையார் ஸ்தல விநாயகராகப் போற்றப்படுகின்றார். திருமுதுகுன்றத்தைப் பற்றி பிரம்ம தேவனுக்கு அறிவுறுத்தியவர் இவரே. சுந்தரர் ஆற்றில் போட்ட 12,000 பொற்காசுகளை, ஒவ்வொன்றாக எண்ணி, சரிபார்த்து சொன்னவர். கோஷ்டத்து மூர்த்தங்கள், பிரகார வலச்சுற்று தெய்வங்கள் என அநேக மூர்த்தங்களை தரிசிக்கலாம். பிந்து மாதவப் பெருமாள், அநவர்த்தினி லிங்கம், வல்லபை கணபதி, சுப்ரமண்யர் ஆகியோரின் திருவுருவங்கள் அழகாக இருக்கின்றன. ஐந்து கோபுரங்கள் (நான்கு கோபுரங்களும் கண்டாதித்த கோபுரமும்), ஐந்து பிரகாரங்கள் (மூன்று பிரகாரம் - தேரோடும் வீதி - பஞ்சவர்ண பிரகாரம் - அதாவது மானசீக ஆன்ம பிரகாரம்), ஐந்து விநாயகர்கள் (ஆழத்து பிள்ளையார், வல்லப விநாயகர், மாற்றுரைத்த விநாயகர், முப்பிள்ளையார், மற்றும் தசபுஜ விநாயகர்), ஐந்து கொடி மரங்கள், ஐந்து நந்தி (இந்திர நந்தி, வேத நந்தி, ஆத்ம நந்தி, மால் விடை நந்தி, தர்ம நந்தி), ஐந்து மண்டபங்கள், ஐந்து தேர் என எல்லாமே ஐந்தாக இருக்கும் ஸ்தலம். ஹைடன் துரை எனும் ஆங்கிலேயர், கைலாசப் பிரகாரத்திற்கு தளவரிசை அமைத்து தந்ததாகவும், தேர் இழுக்கும் இரும்பு சங்கிலி மற்றும் வெள்ளிக்குடம் ஆகியவற்றை கொடுத்ததாகவும் ஒரு குறிப்பு கூறுகிறது. நான்முகனால் படைக்கப்பட்ட அக்னி தீர்த்தம் எனும் நடைக் கிணறும், திருமால் சக்கரத்தால் உண்டாக்கிய சக்கர தீர்த்தமும், ஸ்தல விருட்சமான வன்னி மரத்தையும் பிரகாரங்களில் காணலாம். ஸ்தல விருட்சம் 1000 வருடங்கள் பழமை வாய்ந்தது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.