அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோவில் (மணவாளநல்லூர்)

God Name : கொளஞ்சியப்பராக முருகப் பெருமான்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

கொளஞ்சி செடிகள் அடர்ந்து வளர்ந்த பகுதியில், பசு ஒன்று தன் மடியிலிருக்கும் பாலை, ஒரு குறிப்பிட்ட இடத்தில், தினமும் பொழிவதைப் பார்த்த சிலர், அதன் காரணத்தை கண்டறிய முற்பட, செடிகளூடே பீட வடிவில் படிவம் ஒன்று இருப்பதை கண்டறிந்தனர். கொளஞ்சி செடிகளூடே தோன்றியமையால் கொளஞ்சியப்பர் எனும் பெயர் கொண்டார். மனநோய் உள்ளவர்கள், தீராப்பிணி கொண்டவர்கள் இவரை வழிபட்டு, திருநீற்றையும் வேப்ப எண்ணையும் படைத்து பூஜித்து அவற்றை பூசிக் கொள்கின்றனர். இதனால் நோய் குணமடைகின்றது. பகைவர்களால் துன்பப்படுபவர்கள், நம்பி மோசம் போனவர்கள், செய்யாத குற்றத்திற்கு பழி ஏற்றவர்கள் ஆகியோர் இங்கு வந்து, நீதி மன்றத்தில் பிராது செய்வது போல், ஒரு சீட்டில் தம் குறைகளை எழுதி, கோவிலுக்கு உரிய கட்டணம் செலுத்தி விட்டு, பிராது சீட்டை முனியப்பர் சந்நிதியில் உள்ள வேலில் கட்டுகின்றனர். எழுதியவரின் குறைகள் 90 நாட்களுக்குள் கொளஞ்சியப்பரின் ஆசியுடன் நிவர்த்தி ஆகிறது. பின்னர் பிராதினை திரும்பப் பெற்று, பூஜைகள் செய்கின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள முருகப் பெருமானே கொளஞ்சியப்பராக போற்றப்படுகின்றார். இவர் உருவத் திருமேனியாகவும் இல்லாமல், கண்ணுக்கு புலப்படாத அரூவமாகவும் இல்லாமல், சுயம்புவான அருவுருவத் திருமேனியாக தரிசனம் தருகின்றார். மூன்றடி நீள பலிபீடமே இங்கு மூலவராக வழிபடப்படுகின்றது. முருகனது ஷடாட்சர மந்திரம் பொறிக்கப்பட்டுள்ளது. அபிஷேக ஆராதனைகள் பீடத்திற்கே செய்கின்றனர். கிருத்திகை தினங்களில் சந்தனக் காப்பிட்டு உருவம் காட்டி பூஜிக்கின்றனர். கிழக்கு பார்த்த சந்நிதியில் சித்தி விநாயகர் மிகப் பெரிய திருமேனியுடன் தரிசனம் தருகின்றார். சந்தனக் காப்பு செய்வித்தால் அழகு மேலும் கூடுகின்றது. அருகே தியான ஈஸ்வரன் எழுந்தருளியுள்ளார். அலங்கரிக்கப்பட்ட பெரிய குதிரைகள் இரண்டு அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இடும்பன் மற்றும் கடம்பன் தனி சந்நிதி கொண்டுள்ளனர். இவர்களது ஆசி தீராத நோய்களை தீர்த்து வைக்கிறது. மகாமண்டபம் அருகே முனியப்பர் சந்நிதி. எதிரே ஏராளமான சூலங்கள் நடப்பட்டுள்ளன. சற்று தள்ளி வீரனார் காட்சி தருகின்றார். ஏறிழிஞ்சி மரத்தின் காற்று இதமாக வீசுகின்றது. அகப்பேய் சித்தர் ஜீவசமாதி அடைந்த ஸ்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.