அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில் (திருவட்டத்துறை)
God Name : தீர்த்தபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
யார் வலிமை மிக்கவர் என்ற போட்டியில் ஆதிசேஷனும், வாயு பகவானும் இறங்கி மேரு மலையை அசைக்க முயன்றனர். இந்த முயற்சியில் வாயு பகவான் தன்னை வஞ்சித்து வென்று விட்டதாக எண்ணி சினம் கொண்ட ஆதிசேஷன், இத்தலத்தில் கடுந்தவம் புரிந்து வாயுவை வெல்ல வரமும், தன் பெயரால் இத்தலம் அரவந்துறை என விளங்கவும் வரம் கேட்டதாக ஸ்தல வரலாறு.
உச்சிவேளை வெய்யிலில் நடந்து வந்த திருஞானசம்பந்தருக்கு பாதம் நோகுமே என, சிவபெருமான் முத்து சிவிகை, முத்துக் குடை, முத்து சின்னம் தந்தருளியதாக ஸ்தல வரலாறு.
சூரிய-சந்திரர்களால் சாபம் கொண்ட அங்காரகனும் சனியும் தோஷ நிவர்த்தி பெற்ற ஸ்தலம் ஆதலால், இத்தகைய தோஷங்களை உடையவர்களுக்கு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
நீவா நதியின் வடகரையில் உள்ள ஸ்தலம். இந்த நதிக்கரையில் ஆதித்துறை (காரியனூர்), திருவாலந்துறை, திருமாந்துறை, ஆடுதுறை, திருவட்டத்துறை, திருவரத்துறை, திருக்கைத்துறை என்ற ஏழு துறைகளையும், சப்த ரிஷிகள் பூஜை செய்ய வேண்டி, நதியை நீவா என்றழைத்ததால் நீவா எனப் பெயர் கொண்டதாக கூறுவர்.
கோவிலின் அருகே ஓடும் நீவா நதியின் வெள்ளப் பெருக்கு ஊருக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்த, நந்தி தெற்கு நோக்கி, நதியைப் பார்த்த வண்ணம் இருக்கின்றது.
தேவாரத்திருத்தலம்.
மூலவர்: தீர்த்தபுரீஸ்வரர், அம்பாள்: திரிபுரசுந்தரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் தீர்த்தபுரீஸ்வரர். நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி தரிசனம் தரும் அம்பாள் திரிபுரசுந்தரி தனி சந்நிதி கொண்டுள்ளார்.
ஸ்தல விநாயகராக வலஞ்சுழி விநாயகரையும், கோஷ்ட மூர்த்தங்களையும், அஷ்டலட்சுமிகளையும், பிட்சாடனர், ஆதிசேஷன் போன்ற திருவுருவங்களையும் தரிசிக்கலாம்.
28 சிறு லிங்கங்கள் கொண்ட சிவகாமலிங்கம், சேர-சோழ-பாண்டிய மன்னர்கள் வழிபட்ட சேரலிங்கம், சோழலிங்கம், பாண்டியலிங்கம் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். மாடங்களில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் அழகுற அமைந்துள்ளன.
காவல் தெய்வமாக செல்லியம்மன் கோவில் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.