அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோவில் (திருக்கூடலையாற்றூர்)

God Name : நர்த்தன வல்லபேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

மணிமுத்தா நதி, வெள்ளாறு இரண்டும் இணைந்து ஓட, சரஸ்வதி அந்தர்வாஹினியாக கலக்குமிடமென்பதால் கூடலையாற்றூர் எனப்படுகிறது. திரிவேணி சங்கமமாக கருதப்படுகிறது. பிரம்மா, சரஸ்வதி இருவரும் வழிபட்ட ஸ்தலம். பிரம்மா, சரஸ்வதி இருவருக்கும் நர்த்தன தரிசனம் தந்ததால், நர்த்தன வல்லபேஸ்வரர் எனப் பெயர் கொண்டார். சுந்தரர் விருத்தாச்சலம் செல்லும் வழியில், முதியவரின் வேடம் கொண்டு சென்ற இவ்விறைவன், இவ்வாலயத்திற்கு வழிகாட்டி, பின்னர் மறைந்து விட்டார் என ஸ்தல வரலாறு. அகஸ்தியர் தாம் கற்ற வித்தைகள் மறக்காமலிருக்க இவ்விறைவனை பிரார்த்தித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. தேவாரத் திருத்தலம்.
மூலவர்: நர்த்தன வல்லபேஸ்வரர், அம்பாள்: (இரண்டு) பராசக்தி மற்றும் ஞானசக்தி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான நர்த்தன வல்லபேஸ்வரர். சுயம்புலிங்கம். இவருக்கு நெறி காட்டும் நாயகர் என்ற பெயரும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதி. சித்திரை மாதம் 1 முதல் 3 தேதி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் லிங்கத்தின் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. பராசக்தி மற்றும் ஞானசக்தி என இரண்டு அம்பிகைகள் எழுந்தருளி தரிசனம் தருகின்றனர். சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகானவை. சித்ரகுப்தரின் உற்சவ மூர்த்தி அரிதானது. நவகிரகங்கள் இல்லை. பராசக்தி அம்மன் சந்நிதியில் திருநீறும், ஞானசக்தி அம்மன் சந்நிதியில் குங்குமமும் தருகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.