அருள்மிகு ஸ்ரீ பூவராக ஸ்வாமி திருக்கோவில் (ஸ்ரீ முஷ்ணம்)
God Name : மூலவர்: ஸ்ரீ பூவராக ஸ்வாமி - உற்சவர்: யக்ஞ வராஹ மூர்த்தி
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
இரண்யாட்சகன் எனும் அசுரன், பூமியை பாயாக சுருட்டி எடுத்துக்கொண்டு பாதாளம் சென்று விட்டான். வானவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மஹாவிஷ்ணு வராஹ அவதாரமெடுத்து இரண்யாட்சனை சம்ஹாரம் செய்து, பூமியை மீட்டார். பூமாதேவியின் விருப்பத்திற்கிணங்க இங்கு எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். பாதி நரனாகவும், பாதி வராஹமாகவும் உள்ள தோற்றம்.
வராஹ மூர்த்தியால் வதம் செய்யப்பட்ட இரண்யாட்சகனின் மகள் ஜல்லிகை கடுந்தவம் புரிந்து பூவராகரின் தரிசனம் பெற்றாள். அவளது மகன் தண்டகன் அனைவரையும் இம்சித்ததால் வராஹ மூர்த்தி அவனையும் அழித்து நற்கதி வழங்கினார் என வரலாறு.
தனது அயர்ச்சி தீர இங்கு தங்கினார் வராஹ மூர்த்தி. சம்ஹார தளர்ச்சியினால் ஏற்பட்ட அபரிதமான வியர்வை நீரே இங்கு புஷ்கரிணியாக உள்ளது. அதன் கரையிலுள்ள அஸ்வத்த (அரச) மரம் மிகவும் புனிதத்துவம் கொண்டது. இந்த அரசமரமே உலகில் முதன்முதலாக தோன்றியது என்பர். இந்த அஸ்வத்த மரமும், துளசியும் வராஹரின் கண்களிலிருந்து உருவானவை என்பர்.
இங்கு தரப்படும் முஸ்தாபி சூரணம் நோய் தீர்க்கும் சஞ்சீவினி எனப் போற்றப்படுகிறது. முஸ்லிம்களாலும் வழிபடப்படுகிறது இந்த ஸ்தலம் எனத் தெரிவிக்கின்றனர். கோரைக் கிழங்கு மாவு உருண்டை பிரசாதமாகத் தரப்படுகிறது.
சார்லஸ் ஹைட் என்ற ஆங்கிலேயர், இரண்டு வைர முடிகளையும் தேர் இழுக்கும் சங்கிலியையும், கோவிலுக்கு பரிசாக தந்துள்ளார் என ஆலயக் குறிப்பு ஒன்று கூறுகின்றது.
பூவராக க்ஷேத்ரம் எனப்படும் இத்தலம் எட்டு ஸ்வயம் வியக்த க்ஷேத்ரங்களுள் ஒன்றாக போற்றப்படுகிறது.
மூலவர்: ஸ்ரீ பூவராக ஸ்வாமி, உற்சவர்: யக்ஞ வராஹ மூர்த்தி, தாயார்: அம்புஜவல்லி.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பூவராக ஸ்வாமி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். திருமேனி மேற்கே சேவார்த்திகளைப் பார்த்தவாறும், திருமுக மண்டலம் தெற்கே இரண்யாட்சகனைப் பார்த்தவாறும் காட்சி தருகின்றார். இடுப்பில் ஊன்றிய கரங்களில் சங்கு-சக்கரங்கள் மறைந்துள்ளன. சாளக்கிராம திருமேனி. திருவடிகளருகே ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்கள் நிற்கின்றனர். அஸ்வத்த நாராயணனுக்கு பிரத்யட்சம் ஆனதாக ஐதீகம்.
அர்த்த மண்டபத்தில் உற்சவரான யக்ஞ வராஹ மூர்த்தி இரு தேவியர்களுடன் சேவை சாதிக்கின்றார்.
தாயார் அம்புஜவல்லி மிகுந்த வரப்பிரசாதி என்பர். தாயாரின் தோழிகளான சப்த கன்னிகைகளுக்கும் சந்நிதி உள்ளது. அவர்கள் எழுவரும் சொர்க்கவாசல் கோபுரத்திற்கு கிழக்கே உள்ள குழந்தையம்மன் சந்நிதியில் உள்ளனர்.
மூலவரை சேவிக்கும் முன்பாக இங்குள்ள ஸ்ரீநிவாசரை சேவிப்பது இங்கு கடைபிடிக்கும் சம்பிரதாயம். ஆதி வராஹர், யோக நாராயணர், வேணு கோபாலன் என அநேக மூர்த்தங்களை சேவிக்கலாம்.
பட்டாபிஷேக கோலம் கொண்ட ஸ்ரீ ராமரின் சௌந்தர்யமான மேனியை சேவிக்க ஆனந்தம் கிடைக்கிறது. எதிரில் ஹனுமன். இங்குள்ள நந்தவனத்தில் ராமாயணத்தைப் பாராயணம் செய்யும் கோலத்தில் ஹனுமனை தரிசிக்கலாம்.
தினமும் வேத பாராயணம் நடக்கும் புருஷ சூக்த மண்டபம் பல அரிய சிற்பங்களைக் கொண்டுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.