அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் (மேலக்கடம்பூர்)
God Name : மூலவர்: அமிர்தகடேஸ்வரர்் சிறப்பு மூர்த்தம்: பிரளயப் பிரதோஷ தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி.
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
தேர் வடிவில் அமைக்கப்பட்ட சிவாலயங்களை கரக்கோவில் என்று கூறுவார்கள். கடம்பூர் கரக்கோவில் என்று இந்தக் கோவிலை அழைக்கின்றனர்.
பாற்கடலைக் கடைந்து, தேவர்கள் அமிர்தம் பெற முற்பட்டபோது, விநாயகரை வணங்காமல் ஆரம்பித்ததால், அமிர்த கலசத்தை பிள்ளையார் பூலோகத்தில் மறைத்து வைத்து விட்டார். இந்த நிகழ்வின்போது சிந்திய ஒரு துளி அமிர்தமே, இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ள சிவலிங்க ஸ்வரூபம். இதனால் இறைவன் அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமத்தைக் கொண்டார்.
இந்திரனின் தாயார் இங்கு சிவபெருமானை வழிபட்டு வந்தார் எனக் கூறப்படுகின்றது. இதனால் தினமும் ஒரு காலம் சிவபெருமானுக்கு பட்டுப் பட்டாடை சாத்துகிறார்கள். அந்த நேரத்தில் தரிசிப்பது விசேஷம்.
அமிர்தகடேஸ்வரரை விண்ணுலகம் எடுத்து செல்ல முயன்ற தேவேந்திரன், விநாயகரை வணங்காது குதிரைகள் பூட்டிய தேருடன் சிவலிங்கத்தைக் கட்டி இழுத்தான். விநாயகர் தன் பெரு விரலால் தேர் சக்கரத்தை அழுத்திட, தேர் சக்கரம் நிலத்தில் புதையுண்டது. ஒரு பக்க கல் சக்கரங்கள் பூமியில் ஆழ்ந்தும், மறு பக்கம் தரையிலிருந்து மேலாக தூக்கியும் காணப்படுவது அதிசயமான ஒன்று. பின்னர் இந்திரன் தனது கரத்தால் அகழ்ந்து கொண்டு போக எத்தனித்தான். இதனால் கரக்கோவில் எனப் பெயருற்றது. பிராயச்சித்தமாக இளங்கோவில் ஒன்றினை அமைத்து ருத்ர கோடீஸ்வரரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
கோவிலின் தென்மேற்கு மூலையில் அமர்ந்துள்ளார் இந்திரனை சோதித்த ஆரவார விநாயகர். வாதாபி கோட்டை கணபதி என்பர். ராஜேந்திர சோழன் வாதாபியிலிருந்து கொண்டு வந்த இரண்டு விநாயகர்களில் ஒன்று திருசெங்காட்டான்குடியிலும், மற்றொன்று இத்தலத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
கணங்கள் பூஜித்த ஸ்தலம். சூரபத்மனை அழித்திட முருகன் வில்லினை பெற்ற ஸ்தலம்.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: அமிர்தகடேஸ்வரர், பிரளயப் பிரதோஷ தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி. அம்பாள்: வித்யுத்ஜோதி நாயகி.
கருவறையின் சிகரம் வட்ட வடிவிலும், கொடுங்கை எண்கோணமாக எட்டுத் திசைகள் நோக்கியும் காணப்படுகின்றன.
ரதம், சக்கரம், குதிரைகள் கொண்ட தேர் வடிவத்தில் அமைந்துள்ள கருவறை சிற்பக் கருவூலமாக விளங்குகிறது.
இதில் இடம்பெற்றுள்ள சக்கரங்கள், குதிரைகள் ஆகியன அற்புதமான படைப்புகள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் அமிர்தகடேஸ்வரர். சங்கநிதி, பதுமநிதி காட்சி தருகின்றனர். பங்குனி மாதம் 3, 4, 5 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சுவாமியின் மீது படர்ந்து, ஜோதி மயமாக்கி, சூரிய பூஜை செய்கின்றன.
மஹாமண்டபத்தில் எழுந்தருளியுள்ள வித்யுத்ஜோதி நாயகி காலையில் சரஸ்வதியாகவும், மாலையில் லட்சுமியாகவும், இரவில் சக்தி ஸ்வரூபமாகவும் தரிசனம் தருகின்றாள். இவளுக்கு ஜோதி மின்னம்மை என்ற பெயரும் உண்டு.
வலச்சுற்றில் - அர்த்தநாரீஸ்வரர், திரிபுரசம்ஹார மூர்த்தி, சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர், பைரவர், ரிஷபாரூடர், நடராஜர், கங்காதரர் என ஒன்பது மகேஸ்வர வடிவங்களை தரிசிக்கலாம். இவற்றுள் தட்சிணாமூர்த்தியின் வடிவம் நம் கண்களையும் மனதையும் விட்டு அகலாது. ஆரவார விநாயகரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது.
ராஜேந்திர சோழன் வாதாபியிலிருந்து கொண்டு வந்த இரண்டு விநாயகர்களில் ஒன்று திருசெங்காட்டான்குடியிலும், மற்றொன்று இத்தலத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
பிரளயப் பிரதோஷ தசபுஜ ரிஷப தாண்டவமூர்த்தி - பிரதோஷ காலங்களில் மட்டுமே தரிசிக்க முடியும். வேறெங்கும் காணக் கிடைக்காத அற்புதமான பஞ்சலோக சிலை. குலோத்துங்க சோழனது குருவான ஸ்ரீ கண்ட சிவம் என்பவர், வங்காளத்திலிருந்து கொண்டு வந்து பூஜித்ததாக குறிப்பு ஒன்று கூறுகின்றது.
உமா-மகேஸ்வர் - சந்தோஷ ஆலிங்கன மூர்த்தியின் அழகு மீண்டும் மீண்டும் தரிசிக்க தூண்டும் வகையில் உள்ளது. பிரதோஷ காலத்தில் இறைவன் நந்தியின் கொம்புகளுக்கிடையே, தூக்கிய திருவடி காட்டி, ஆடும் நடனத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.
அங்காரகனின் தோஷத்தை நீக்கிய வில்லேந்திய வேலவனின் திருமேனி அற்புதமான படைப்பு. சிம்ம வாகினி மகிஷாசுர மர்த்தினி மற்றும் கடம்பவனக் காளியின் திருவுருவங்கள் உள்ளன.
புறச்சுவர் கோட்டங்களில் புராணங்களை விளக்கும் அழகு சிற்பங்கள், கல்வெட்டுக்களுடன் இடம்பெற்றுள்ளன. கழுகு வாகனத்தில் சனீஸ்வரர் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.