அருள்மிகு வீரநாராயணப் பெருமாள் திருக்கோவில் (காட்டுமன்னார்கோவில் - காட்டுமன்னார்குடி)

God Name : மூலவர்: வீர நாராயணர், உற்சவர்: ராஜகோபாலன், நித்ய உற்சவர்: காட்டும் மன்னனார், பிரார்த்தனை பெருமாள்: ஷெண்பக மன்னனார்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

இத்தலத்திலுள்ள வேதபுஷ்கரிணியில் உள்ள தாமரை மலர் ஒன்றில் திருமகள் அவதரித்தாள். மதங்க முனிவர் குழந்தைக்கு மரகதவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். திருமண வயதை எட்டியதும், சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்தார். பல மன்னர்கள் கலந்து கொண்ட சுயம்வரத்தில், மஹாவிஷ்ணுவும் ஒரு மன்னனைப் போல வேடம் பூண்டு கலந்து கொண்டார். மன்னனாக வந்த மஹாவிஷ்ணுவிற்கு மாலையிட்டாள் மரகதவல்லி. எதிர்த்த மன்னர்களை போரிட்டு ஜெயித்து, வீரநாராயணர் எனும் பெயர் கொண்டு, பின்னர் மரகதவல்லியை மணந்து, மன்னனார் என்ற பெயர் கொண்டார். திருமகளை மயக்கி மணந்து கொண்டவர் என்பதால் அழகிய மணவாளன் ஆனார். யாத்திரையாக வந்த சேவார்த்திகளில் சிலர், வீர நாராயணப் பெருமாளின் சந்நிதி முன்பாக அமர்ந்து, ஓராயிரத்துள் இப்பத்தும் என்று முடியும் நம்மாழ்வாரின் பாசுரத்தை பாடினார்கள். இந்த பாசுரங்களினால் அவர்களை அணுகி, தமக்கு அந்த ஓராயிரம் பாசுரங்களும் வேண்டும் எனக் கேட்டார். தங்களுக்கு பத்து பாசுரங்கள் மட்டுமே தெரியுமென்றும், நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வார் இயற்றிய 'கண்ணினுள் சிறுத்தாம்பு' என்ற பாடலை, நம்மாழ்வார் சந்நிதி முன்பாக அமர்ந்து, பன்னிரெண்டாயிரம் முறை ஜெபித்தால், மீதி ஆயிரம் பாசுரங்கள் கிடைக்க வழி இருப்பதாகவும், சேவார்த்திகள் தெரியப்படுத்தினார்கள். உடனே ஆழ்வார் திருநகரி விரைந்து சென்ற நாதமுனி, அவ்வாறே செய்து, நம்மாழ்வாரை தரிசித்து, சேவித்து, ஆயிரம் பாசுரங்களையும், மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் பெற்றுத் தந்தார் என ஸ்தல வரலாறு. பாசுரங்களை மீட்டுத் தந்த நாதமுனிகளின் அவதார ஸ்தலம். மறைந்து போன பிரபந்தங்களை வெளிப்படுத்தியது மன்னனார் என்பதால், இவ்வூருக்கு காட்டும் மன்னார் என பெயர் வந்தது. காலப்போக்கில் காட்டுமன்னார்கோவில் என்றானதாகக் கூறுவர்.
மூலவர்: வீர நாராயணர். உற்சவர்: ராஜகோபாலன், நித்ய உற்சவர்: காட்டும் மன்னனார் என்கிற சுந்தர கோபாலன் ஆகிய அழகிய மணவாளன். பிரார்த்தனை பெருமாள்: ஷெண்பக மன்னனார். தாயார்: மரகதவல்லி. உற்சவ தாயார்: ஷெண்பகவல்லி என்கிற ஹேமாம்புஜ நாயகி. மூலஸ்தானத்தில் வீர நாராயணப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். பத்தடி உயரம் கொண்ட நெடிதுயர்ந்த அழகிய திருமேனி. சங்கு-சக்கரதாரியாய், அபய-வரத ஹஸ்தங்களுடன் கம்பீரமாக காட்சி தருகின்றார். ஸ்ரீதேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். மூலவருக்கு முன்பாக ராஜகோபாலன் (அழகிய செப்புத் திருமேனி) உற்சவ மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார். பசு மாட்டின் மீது ஒய்யாரமாக சாய்ந்த நிலையிலும், இடது கை ஊன்றியும், தூக்கிய வலது கையில் சாட்டையுடனும் காட்சி தருகின்றார். ருக்மணி, சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர். அவருக்கு பக்கத்தில் உபய நாச்சியார்களுடன் இருக்கும் காட்டும் மன்னனார் என்கிற சுந்தர கோபாலன் ஆகிய அழகிய மணவாளன் பேரெழிலுடன் காணப்படுகின்றார். பிரம்மோற்சவ விழாக்களில் வெளியே வருபவர். பிரார்த்தனை பெருமாள் ஷெண்பக மன்னனார் மிகவும் அழகான திருமேனி. மூலவராக மரகதவல்லித் தாயாரும், உற்சவ தாயாராக ஷெண்பகவல்லியும் தனி சந்நிதியில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். முத்துஸ்வாமி தீட்சிதரின் 'மரகதவல்லீம்' எனும் கீர்த்தனை (காம்போதி ராகம்) தாயார் சந்நிதியின் முன்பாக இயற்றப்பட்டது. மஹாமண்டபத்தின் அருகே நாதமுனிகளின் சந்நிதி. அருகில் நம்மாழ்வார் புளிய மரத்தடியில் காட்சி தர, இரு கரங்களைக் கூப்பிய நிலையில் மதுரகவியார் இருக்கின்றார். தனி சந்நிதிகளில் ராமர், வராஹப் பெருமான், யோக நரசிம்மர் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம். வலச்சுற்றில் ஆளவந்தாரின் சந்நிதி, ஆண்டாள், மதங்கர் மற்றும் ஆழ்வாராதிகளின் சந்நிதிகள். சுதர்சன-நரசிம்மரையும் சேவிக்கலாம். இவ்வூரின் சிவாலயமாக அனந்தீஸ்வரர் ஆலயம் இருக்கின்றது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.