அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் (ஓமாம்புலியூர்)

God Name : பிரணவ வியாக்ரபுரீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவள்ளூர்

Call : +91-

இலந்தை வனமாக இருந்த இந்த ஸ்தலத்தில் அமர்ந்து உமையன்னை தவம் மேற்கொண்டாள். தட்சிணாமூர்த்தி ஸ்வரூபமாக பிரத்யட்சமான உமா தேவிக்கு 'ஓம்' எனும் பிரணவத்தையும் தத்துவ விளக்கங்களையும் உபதேசித்தார். தட்சிணாமூர்த்தியிடம் அம்பிகை உபதேசம் பெற்ற ஸ்தலம் என்பதால் பிரணவ வியாக்ரபுரம் எனப்படுகிறது. ஓமம் என்றால் வேள்வி. பிரணவப் பொருள் உபதேசம் நடந்த ஸ்தலம் ஆதலால் 'ஓம் - ஆம் - புலியூர்' ஓமாம்புலியூர் என்றானது. அம்பாளுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசிக்கும்போது முருகன் அங்கு வந்ததாகவும், நந்தி அவரை உள்ளே விட மறுத்ததால், வண்டு உருவில் சென்று தாயாரின் கூந்தலிலுள்ள மலரில் அமர்ந்து கொண்டு உபதேசத்தை கேட்டறிந்ததாகவும், இதையே சுவாமி மலையில் தந்தைக்கு உபதேசித்தருளினார் என்றும் கூறுவர். வியாக்ரபாத முனிவர், தில்லை நடராஜனை தரிசிப்பதற்காக, இவ்வூர் வழி செல்கையில், இரவு நேரம் ஆகிவிட்டபடியால், நடராஜரை தரிசிக்க முடியவில்லையே என வருந்தினார். இவ்விறைவன் வியாக்ரபாதருக்கு, இங்கேயே நடராஜராக காட்சி தந்தருளினார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. இந்த விக்ரஹத்திற்கு பூஜை செய்தார் வியாக்ரபாதர். அந்த விக்ரஹம் இவ்வாலயத்து தெற்கு பிரகாரத்தில் உள்ளது. குரு தோஷம் நீங்க இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட நலன் கிடைக்கும். ரேவதி நட்சத்திரம் கொண்டவர்கள் வழிபட வேண்டிய ஸ்தலம் இது. புலிக்கு பயந்து வில்வமரம் ஏறிக்கொண்ட வேடன் ஒருவன், இரவு முழுவதும் மரத்திலமர்ந்து வில்வ இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். மரத்தடியிலிருந்த சிவலிங்கத்தின் மீது வில்வ தளங்கள் விழுந்ததால், மகிழ்ந்த இறைவன் பிரத்யட்சமாகி அவனுக்கு முக்தி அளித்தார். தேவாரத்திருத்தலம் - ஐந்து புலியூர்களுள் ஒன்று.
மூலவர்: பிரணவ வியாக்ரபுரீஸ்வரர், அம்பாள்: புஷ்பலலிதாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக, சதுர பீடமும் உயரமான பாணமும் கொண்டு எழுந்தருளி தரிசனம் தருகின்றார் வியாக்ரபுரீஸ்வரர். இவர் சுயம்பு மூர்த்தம். இவருக்கு வடதளி உடையார், துயர் தீர்த்த நாதர் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் வழிபட்டதால் வியாக்ரபுரீஸ்வரர் என்று பெயர் கொண்டார். சந்நிதியின் ஒருபுறம் ஜலந்திரனை அழித்து திருமாலுக்கு சக்கரம் வழங்கிய சிற்பமும், ஐந்து புலியூர்களில் வியாக்ரபாதர் வழிபட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன. அம்பாள் புஷ்பலலிதாம்பிகை அழகே உருவாக தரிசனம் தருகின்றாள். இவளுக்கு பூங்கொடி நாயகி என்ற பெயரும் உண்டு. சிவபெருமான் சந்நிதிக்கும் அம்பாள் சந்நிதிக்கும் இடையே, தெற்கு நோக்கியவாறு உள்ள சந்நிதியில் சபா மூர்த்தியாக (நடராஜர் இருக்க வேண்டிய இடத்தில்) தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். கல் திருமேனியாக விளங்கும் இவர் ராஜயோக மூர்த்தியாக விளங்குகிறார். அம்பாளுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை அருளியவர் எனக் கூறப்படுகிறது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.