அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோவில் (திருநாரையூர்)
God Name : சௌந்தரேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
ஸ்வாமியையும் அம்பிகையையும் சிரத்தையாக நாள்தோறும் பூஜித்து வந்தார் இவ்வாலயத்தைச் சேர்ந்த சிவாச்சார்யார்.
இறைவனருளால் அவருக்கு குழந்தை பிறந்தது. பாலசுபத்தன் என பெயரிட்டு வளர்த்து வந்தார். குழந்தை பருவத்தில் இருந்தே பாலசுபத்தன் பொள்ளாப் பிள்ளையாரிடம் மிகுந்த பக்தி கொண்டு அவருக்கு செய்யும் பூஜைகளை கவனித்து வரலானான்.
அவனது அன்றாட விளையாட்டே பிள்ளையார் மீது காய்ந்த இலைகளை போடுவதும், களிமண்ணால் லட்டு போல செய்து, ஸ்வாமி சாப்பிடுங்கள் என்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தான். விநாயகரும் அதை லட்டாக மாற்றி எடுத்துக் கொள்வார்.
ஒரு நாள் அர்ச்சகர் வெளியூர் செல்ல வேண்டி இருந்ததால், பிள்ளையாருக்கு பூஜை செய்ய மகனை அனுப்பினார். பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து, வஸ்திரம் மாற்றி, பூஜைகளைச் செய்து மகிழ்ந்தான் சிறுவன். நைவைத்யமாக வைத்ததை பிள்ளையார் உண்ணாமலிருக்கவே, தான் ஏதோ குற்றம் செய்து விட்டதாக கருதி, கருங்கல்லில் மண்டையை மோதி உடைத்துக் கொள்ள முயன்றான்.
அவனுடைய செய்கையை தடுத்து நிறுத்திய பிள்ளையார், அவனுக்கு காட்சி தந்து, அவனளித்த நைவேத்யத்தை ஏற்றுக் கொண்டார். பிள்ளையாரிடம் நிஜமான பக்தி கொண்டிருந்த சிறுவனுக்கு பிள்ளையாரின் அனுக்ரஹம் தொடர்ந்து கிடைத்தது. நம்பியாண்டான் நம்பி என்ற பெயரும் கிடைத்தது.
திருமுறைகள் இருக்குமிடத்தை தேடியலைந்த நம்பியாண்டான் நம்பிக்கும், ராஜராஜ சோழனுக்கும் தில்லை நடராஜர் ஆலயத்தில் திருமுறைகள் இருப்பதாக, அசரீரியாக தெரியப்படுத்தியவர் இந்த விநாயகர் என்பதனால் இவரை திருமுறை காட்டிய விநாயகர் என்று போற்றுவார்கள்.
முத்கலரின் புதல்வரான புருசுண்டி முனிவரை அவமதித்ததால் சாபம் பெற்ற நாராயண முனிவர் நாரை வடிவம் கொண்டார். துர்வாச முனிவரால் சபிக்கப்பட்ட கந்தர்வன் நாரை வடிவம் கொண்டு அலைந்ததாகவும் கூறுவர்.
கங்கை நீரை தன் அலகுகளில் கொண்டு வந்து தினமும் இங்குள்ள சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து சாப விமோசனம் வேண்டி நிற்குமாம் நாரை. ஒரு நாள் கங்கை நீருடன் கிளம்பிய நாரை வானத்தில் வந்து கொண்டிருக்கும்போது, பெருமழையில் சிக்கி தன் சிறகுகளை இழந்தது.
(சிறகிழந்த நல்லூர் எனும் ஊர் 1 கி.மீ தூரத்தில் அருகாமையில் உள்ளது. இது ஒரு வைப்பு ஸ்தலம். இங்கு ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது.)
சிறகுகளை இழந்த நாரை, தவழ்ந்து வந்து இறைவனை பூஜித்தது. இதனால் மகிழ்ந்த இறைவன், காட்சி தந்து, சாப விமோசனமும் தந்தார் என ஸ்தல வரலாறு.
வைகாசி விசாகத்தன்று நாரை விக்ரஹத்தை மூலவரின் சந்நிதி முன்பாக கொண்டு வந்து முக்தி பெறும் நிகழ்வை ஐதீகமாக கொண்டாடுகின்றனர்.
தேவாரத்திருத்தலம் - விநாயகரின் ஆறு படை வீடுகளில் ஒன்று - (முதலாம் படைவீடு)
மூலவர்: சௌந்தரேஸ்வரர், அம்பாள்: திரிபுரசுந்தரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் சௌந்தரேஸ்வரர். ஒளி வீசும் தேஜோமய லிங்கம். சுயம்பிரகாசர் என்ற பெயரும் உண்டு. இரண்டு கலசங்களைக் கொண்ட அர்த்த சந்திர விமானத்தையுடைய மூலஸ்தானம்.
பிரகாரத்தில் தனி சந்நிதி கொண்டு திருமூலநாதர் எனப்படும் மற்றொரு மூலவரும் சிவலிங்க ஸ்வரூபமாக தரிசனம் தருகிறார்.
மகாமண்டபத்தில் உற்சவ மூர்த்திகளையும், சோபன மண்டபத்தில் சிவகாமி உடனுறை நடராஜரையும் தரிசிக்கலாம். சிவாலய கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக உள்ளன.
வெளிப்பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சந்நிதியில் அம்பாள் திரிபுரசுந்தரி தரிசனம் தருகிறாள்.
சௌந்தரேஸ்வரருக்காக ஒருவர், திருமூலநாதருக்காக ஒருவர் என இரண்டு சண்டிகேஸ்வரர்கள் மற்றும் மூன்று பைரவர்களை தரிசிக்கலாம்.
தனி சந்நிதியில் விசேஷ மூர்த்தியாக பொள்ளாப் பிள்ளையார் எழுந்தருளியுள்ளார். சுயம்பு மூர்த்தி. கல்லைப் பொளியாமல் தோன்றிய அல்லது உளியால் செதுக்கப்படாது, சுயம்புவாக தோன்றியவர் என்பதால் இந்தப் பெயர் கொண்டார். இவருக்கு நம்பியாண்டார், திருமுறை காட்டிய விநாயகர் ஆகிய பெயர்களும் உண்டு.
பொள்ளாப் பிள்ளையார் மண்டபத்தில் நம்பியாண்டார் நம்பி மற்றும் ராஜராஜசோழன் திருவுருவங்களை தரிசிக்கலாம்.
வானில் இருக்கும் சந்திரனுக்கு தீபாராதனை காட்டும் சம்ப்ரதாயம் உள்ள ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.