அருள்மிகு கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில் (சிதம்பரம்)
God Name : மூலவர்: கோவிந்தராஜர்் உற்சவர்கள்: தேவாதிதேவன், சித்திரக்கூடத்துள்ளான்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
இரண்டாம் குலோத்துங்கன் எனப்படும் அநபாய சோழன், மூலவரின் சிலையை எடுத்து கடலில் வீசி விட்டதாகவும், ஸ்ரீ ராமாநுஜர் அதை சிரமப்பட்டு கடலிலிருந்து மீட்டு எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகின்றது. இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.
மூலஸ்தானத்தில் கோவிந்தராஜப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, அனந்தன் மேல் போகசயனத்தில் சேவை சாதிக்கின்றார். அஷ்டாட்சர படிகளுடன் கூடிய வேதசிரம் எனும் பீடத்தில் சயனித்துள்ளார். திருவடிகளருகே ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் அமர்ந்துள்ளனர். புண்டரீகவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். இரத்தின ஆசனத்தில் வீற்றிருந்த கோலத்தில் உற்சவ மூர்த்தி தேவாதிதேவன் சேவை சாதிக்கின்றார். இவருக்கு பார்த்தசாரதி என்றொரு திருநாமம் உண்டு. சித்திரக்கூடத்துள்ளான் எனும் மற்றொரு உற்சவர் உபய நாச்சியார்களுடன் சேவை சாதிக்கின்றார். சந்நிதி பிரகாரத்தில் நரசிங்கர், வேணுகோபாலர், கஜேந்திர வரதர், வனவாசக் கோல ராமர், ஹனுமன், ஆண்டாள் சந்நிதிகள் இருக்கின்றன. அர்த்த மண்டபத்தின் இரு பக்கங்களிலும் ஸுதர்ஸனர்/பாஞ்சஜன்யர் ஆழ்வார்களும், பெருமாளுக்கெதிரே கருடாழ்வாரும் எழுந்தருளியுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.