அருள்மிகு இளமையாக்கினார் திருக்கோவில் (சிதம்பரம் - புலீச்சரம்)
God Name : வியாக்ரபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
திருவள்ளூர்
Call : +91-
இங்கு வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் தனியாக சிவன் கோவில் ஒன்றை அமைத்து சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இதனால் இறைவன் வியாக்ரபுரீஸ்வரர் என்ற பெயர் கொண்டார். இத்தலம் புலீச்சரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்நாளில், இக்கோவிலை இளமையாக்கினார் கோவில் என்று அழைக்கின்றனர். திருநீலகண்டர் எனும் அடியவரின் மனைவி தன்னை தீண்டக் கூடாதென திருநீலகண்டத்தின் மீது ஆணையிட்டதால், அவளைத் தொடாது, இளமை துறந்து, முதுமை அடைந்திருந்தார் நீலகண்டர். சிவனடியார் போல் அங்கு வந்த சிவபெருமான் தன் சப்பரத்தைக் கொடுத்து வைத்திருக்குமாறு கூறிவிட்டு, நீராடி விட்டு வந்து திரும்பக் கேட்டார். எவ்வளவு தேடியும் கிடைக்காது போனது சப்பரம். வழக்காடு மன்றத்திற்கு அழைத்தார் சிவனடியார். கணவன் மனைவி இருவருமாக கைப்பிடித்துக் கொண்டு குளத்தில் மூழ்கி, சப்பரத்தை திருடவில்லை என சத்தியம் செய்யச் சொன்னார். இருவரும் தீண்டா நிலை பற்றி தெரிவித்துவிட்டு ஒரு கழியின் இரு முனைகளைப் பற்றிக் கொண்டு நீரில் மூழ்கி எழுந்தனர். நீலகண்டரையும் அவர்தம் மனைவியையும் இக்குளத்தில் மூழ்கச் செய்து என்றும் மாறாத இளமையை அடையச் செய்து, அருளாசி வழங்கினார். இந்த நிகழ்வையொட்டி இவ்வாலயம் இளமையாக்கினார் கோவில் எனவும், தீர்த்தக்குளம் இளமையாக்கிய தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகின்றன. செல்வ சீமானாக வாழ்ந்து வந்த நாயனார் ஒருவர், தமது செல்வத்தை எல்லாம், கோவிலுக்கு விளக்கு ஏற்றி வைப்பதில் செலவிட்டு, வறுமை நிலைக்கு ஆளாகி, கைப்பொருட்களை விற்று, புலீச்சரம் எனும் இளமையாக்கினார் கோவிலில், விளக்கேற்றும் பணியினை தொடர்ந்தார். பச்சைமலை ஏறிச் சென்று, அங்கு விளையும் கணம்புல்லை அறுத்து எடுத்து வந்து விற்று காசாக்கி அந்த காசில் விளக்கேற்றி வந்தார். ஒரு நாள் சோதனையாக, கணம்புல்லை விற்க முடியாமல், எண்ணெய் வாங்க காசில்லாமல், புல்லையே விளக்கிலிட்டு எரித்து பார்த்தார். போதிய வெளிச்சம் கிடைக்காது போனதால், தனது தலைமுடியை அரிந்து விளக்கிலிட்டு எரித்தார். அவரது உறுதியான பக்தியில் மகிழ்ந்த இறைவன் அவர்முன் பிரத்யட்சமாகி நாயனாரை ஆட் கொண்டார். அன்றிலிருந்து கணம்புல் நாயனார் எனப் பெயர் கொண்டார். ஆலயத்தின் பிரகாரத்தில் கணம்புல் நாயனாரின் திருவுருவம் வைத்துள்ளனர்.
மூலவர்: வியாக்ரபுரீஸ்வரர், அம்பாள்: சிவகாமசுந்தரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வியாக்ரபுரீஸ்வரர். அன்னை சிவகாமசுந்தரி உடன் எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். ஆலயத்தின் பிரகாரத்தில் கணம்புல் நாயனாரின் திருவுருவம் வைத்துள்ளனர். கோவிலின் முன்புறமாக உள்ள தீர்த்தக்குளம், அந்நாளில் புலிமடு என்றழைக்கப்பட்டு, தற்போது இளமையாக்கிய தீர்த்தம் எனப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.