அருள்மிகு நாகேஸ்வரமுடையார் திருக்கோவில் (சீர்காழி)

God Name : நாகேஸ்வரமுடையார்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

தேவர்களும்-அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுக்கும் பணியில், அந்த வேலை முடிந்தபின், அமிர்தத்தை பங்கு போட்டுக் கொள்ளும் போட்டியில் இறங்கினர். மகாவிஷ்ணு, அமிர்தத்தை தேவர்களுக்கு பங்கிட்டு கொடுத்து கொண்டிருந்தார். விப்ரசித்-சிம்ஹிகை எனும் அசுர தம்பதியினருக்கு பிறந்த அசுரனான ஸ்வர்பானு என்பவன், தந்திரமாக தேவ வடிவம் கொண்டு, சூர்ய-சந்திரர் நடுவே நின்று, அமிர்தத்தைப் பெற்று உண்டான். இந்த செயலை தெரிந்து கொண்ட சூர்ய-சந்திரர்கள், இதனை மகாவிஷ்ணுவிற்கு குறிப்பால் உணர்த்தினர். அவர் தம் கையிலிருந்த கரண்டியால், அசுரனின் தலையில் ஓங்கி அடித்தார். அடித்த வேகத்தில் கழுத்து துண்டிக்கப்பட்டு தலை சீர்காழியிலும், உடல் செம்பாம்பின்குடி எனும் ஊரிலும் விழுந்தது. சிரம் விழுந்தபடியால் இவ்வூர் சிரபுரம் எனப் பெயர் கொண்டது. தேவாமிர்தம் உண்டதால் துண்டிக்கப்பட்ட இரு பாகங்களும் இரண்டு பாம்புகளாயின. இந்த இரண்டு பாம்புகளும், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டன. தவத்தில் மகிழ்ந்து பிரத்யட்சமான சிவபெருமான், இரண்டு பாம்புகளுக்கும், கிரஹ பதவிகளைத் தந்தார். இவைகளே ராஹு-கேது எனப் பெயர் கொண்டன. தலை விழுந்த இடமான இத்தலம் ஆதி ராஹு ஸ்தலமாக கருதப்படுகின்றது. தேவார வைப்புத்தலம்
மூலவர்: நாகேஸ்வரமுடையார், அம்பாள்: பொன்னாக வல்லி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி தரிசனம் தருகின்றார் மூலவரான நாகேஸ்வரமுடையார். உயரமான பாணத்துடன் நாகாபரணம் அணிந்து கம்பீரமாக காட்சி தரும் அழகிய சிவலிங்கம். தெற்கு பார்த்த சந்நிதியில் அம்பாள் பொன்னாக வல்லி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். திருமணத் தடையை நீக்கும் நாக கன்னியை தரிசிக்கலாம். கோஷ்டத்தில் - மாணிக்க விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், சூரியன், பைரவர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். ராஹுவும்-கேதுவும் தனித்தனி சந்நிதிகளில் உள்ளனர். நீலாதேவி உடனாய சனீஸ்வரர், ராஹுவின் சந்நிதியில் இடம் பெற்றுள்ளார். ராஹுவும், சனியும் இணைந்து அருள் பாலிக்கும் ஸ்தலம். ராஹு - கேது தோஷ பரிகார ஸ்தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.