அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (திருமயிலாடி)
God Name : சுந்தரேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மூலவர்: சுந்தரேஸ்வரர்் அம்பாள்: தேவ நாயகி.
ஸ்தல விநாயகரான குமார கணபதி மிகவும் அழகாகக் காட்சியளிக்கிறார். அவரை வணங்கி ஆசி பெற்று, அடுத்துள்ள சந்நிதி சென்றால், அங்கு எழுந்தருளியிருக்கும் பாலசுப்ரமண்யர் கொள்ளை அழகுடன் காட்சி தருகின்றார். மேற்கரங்கள் இரண்டையும் ஆகாயத்தை நோக்கி வைத்தும், கீழ்க்கரங்கள் இரண்டும் அபய-வரத முத்திரைகள் கொண்டும் தரிசனம் தருகின்றார்.
சந்நிதியில் காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம். இடும்பன்-கடம்பன் இருவரும் அருவுருவமாக, சுக்குமாந்தடி வடிவில் காணப்படுகின்றனர்.
மூலஸ்தானத்தில் சுந்தரேஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். சுயம்பு மூர்த்தம். பெயருக்கு ஏற்றாற்போல் சுந்தரராக தரிசனம் தருகின்றார். அம்பாள் தேவ நாயகி மிகுந்த வரப்பிரசாதி என்பர்.
முருகன் வடக்கு முகமாக துருவ நட்சத்திரம் பார்த்து எழுந்தருளியுள்ளார். வடக்கு முகமாகப் பார்த்தபடி இருப்பது, தமிழகக் கோவில்களில் எங்கும் இல்லாத சிறப்பு எனக் கூறப்படுகிறது.
முருகனின் இடது பாதத்து பாதரட்சையாக, மயில் வடிவில் தனது முகத்தை வைத்திருக்கும் சூரபத்மன், இடது பக்கம் சேவற்கொடி ஆகியவற்றுடன் காணப்படும் முருகனின் பஞ்சலோக விக்ரஹம் பேரெழிலுடன் விளங்குகிறது. திருவிழாக் காலங்களில் மயில்கொடி ஏற்றுவார்கள்.
யோக தட்சிணாமூர்த்தி பத்மாசனமிட்டு அமர்ந்த கோலம். முயலகன் மீது பாதம் வைத்திருக்கவில்லை.
தனி சந்நிதியில் இரட்டைப் பிள்ளையார்களையும், வலச்சுற்றில் சப்த மாதர்களையும் தரிசிக்கலாம். சனீஸ்வர பகவான் சிவலிங்கத்தை வணங்கிய நிலையில் தனி சந்நிதி கொண்டுள்ளார். நுழைவாயிலின் முகப்பிலுள்ள சுதை சிற்பங்களும், நந்தியம் பெருமான் திருவுருவமும் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.