அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் (செவிலிமேடு)
God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், உற்சவர் - ஸ்ரீ சௌந்தர்ய வரதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
Call : +91-
படையெடுப்புகளின்போது வரதராஜர் கோவிலின் விக்ரகங்கள் இங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பொன்று கூறுகிறது. சிவலிங்கமேடு எனப் பெயருற்றிருந்த ஊர் நாளடைவில் மருவி செவிலிமேடு என்றாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மூலவர்: ஸ்ரீ லட்சுமி நரசிம்மர், உற்சவர்: ஸ்ரீ சௌந்தர்ய வரதர், தாயார்: ஸ்ரீ சௌந்தரவல்லி.
மூலஸ்தானத்தின் மூலவராக ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார்.
எட்டடி உயரம் கொண்ட கம்பீரமான திருமேனியுடன் அமர்ந்த நிலையில், இடது தொடையில் ஸ்ரீ லட்சுமி தேவியை அமரவைத்தும், இடது கரத்தினால் அணைத்தவாறும், வலது கரம் அபயஹஸ்தமாகக் கொண்டும் தரிசனம் தருகின்றார்.
உற்சவராக ஸ்ரீ சௌந்தர்ய வரதர் ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்களுடன் சேவை சாதிக்கின்றார்.
தாயார் சௌந்தரவல்லி ஏழடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் கம்பீரமாக அமர்ந்து சேவை சாதிக்கின்றார்.
மூலவர் சந்நிதி எதிரே பச்சைக் கல்லினால் உருவான கருடாழ்வார் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் பேரழகு வாய்ந்த சிலை. காஞ்சி பரமாச்சாரியார் இத்தலத்தில் ஆஞ்சநேய மூர்த்தி பிரதிஷ்டை செய்துள்ளார்.
மிக அழகான திருவுருவம்.
வெளி பிரகாரத்திலுள்ள ராமர் மேடு என்னும் மண்டபத்தில் ஸ்ரீ ராமானுஜரின் திருவுருவத்தை சேவிக்கலாம்.
பானகம் பிரசாதமாக தரப்படுகிறது.
(பட்டாச்சார்யார் பல கோவில்களை பார்த்துக் கொள்வதால் முன் கூட்டியே தகவல் தர வேண்டும்)
இவ்வூரிலுள்ள சிவாலயத்தில் மூலவராக கைலாஸநாதர் மேற்கு பார்த்து எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.