அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் (செம்மங்குடி)

God Name : நாகநாதர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த வேலை முடிந்தபின், அமிர்தத்தைப் பங்கு போட்டுக் கொள்ளும் போட்டியில் இறங்கினர். மகாவிஷ்ணு, அமிர்தத்தைத் தேவர்களுக்குப் பங்கிட்டுக்கொண்டிருந்தார். இரணியனின் தங்கை சிம்ஹிக்கும், விப்ரசித்தி எனும் அசுரனுக்கும் பிறந்த ஸ்வர்பானு என்ற அசுரன், தந்திரமாகத் தேவ வடிவம் கொண்டு, சூர்ய-சந்திரர் நடுவே நின்று, அமிர்தத்தைப் பெற்று உண்டான். இந்தச் செயலைத் தெரிந்துகொண்ட சூர்ய-சந்திரர்கள், இதனை மகாவிஷ்ணுவுக்குக் குறிப்பால் உணர்த்தினர். அவர் தம் கையிலிருந்த கரண்டியால், அசுரனின் தலையில் ஓங்கி அடித்தார். அடித்த வேகத்தில் கழுத்து துண்டிக்கப்பட்டு தலை சீர்காழியிலும், உடல் செம்பாம்பின்குடி எனும் ஊரிலும் விழுந்தது. செம்பாம்பின்குடி என்பதே மருவி செம்மங்குடி என்றானது. தேவாமிர்தம் உண்டதால் துண்டிக்கப்பட்ட இரு பாகங்களும் இரண்டு பாம்புகளாயின. இந்த இரண்டு பாம்புகளும், சிவபெருமானை நோக்கி கடுந்தவம் மேற்கொண்டன. தவத்தில் மகிழ்ந்து பிரத்யட்சமான சிவபெருமான், இரண்டு பாம்புகளுக்கும், கிரகப் பதவிகளைத் தந்தார். இவைகளே ராஹு-கேது எனப் பெயர் கொண்டன. உடல் விழுந்த இடமான இத்தலம் ஆதி கேது தலமாகக் கருதப்படுகிறது.
மூலவர்: நாகநாதர், அம்பாள்: திரிபுரசுந்தரி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார் நாகநாதர். கேதுவால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜித்த லிங்கம். அம்பாள் திரிபுரசுந்தரி அழகு திருவுருவமாக தரிசனம் தருகிறாள். ஐந்து தலை நாகம் குடை பிடிக்க அமர்ந்த நிலையில் கேது பகவான் தரிசனம் தருகிறார். யோக கேது எனப் போற்றப்படுகிறார். நள சக்கரவர்த்தி வழிபட்ட தலம். ஆதி கேது தலம் - தேவார வைப்புத் தலம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.