அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில், மாதானம்

God Name : -

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

வணிகன் ஒருவன் தனது செக்கு மரத்தைச் செப்பனிட வேண்டி, இங்குள்ள புளியமரத்தின் பருத்த அடி பாகத்தை வெட்டி எடுத்து வந்து வீட்டில் வைத்துக் கொண்டான். ஓர் நாள் இரவு அவன் தூங்கும்போது, அந்த மரத்துண்டு தனக்கு வேண்டும் என்று கனவில் வந்து கூறினாள் ஒரு இளம் பெண். வெட்டப்பட்ட மரத்துண்டைப் போய்ப் பார்த்ததில் அது துளிர் விட்டிருந்தது கண்டு ஆச்சர்யப்பட்டுப் போய், மரத்தடியை அகழ்ந்து பார்த்ததில் அழகிய மாரியம்மன் சிலை ஒன்று கிடைத்தது. அதைத் தனது வீட்டிற்கு எடுத்து வந்து வைத்துக் கொண்டான். சிறிது காலம் கழித்து ஊர்ப் பெரியவர் கனவில் தோன்றிய மாரியம்மன், தான் பிரப்பங் காட்டில் இருப்பதாகத் தெரிவித்தாள். பிரப்பங் காட்டில் கண்டெடுக்கப்பட்ட சிலையை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பி வழிபடுகின்றனர். வணிகனுக்குக் கிடைத்த மாரியம்மன் சிலையை மூலஸ்தானத்திற்கு வெளியே ஒரு மேடை மீது பிரதிஷ்டை செய்துள்ளனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் தீமிதி விழாவில் 50,000 பேர் கலந்து கொள்கின்றனர்.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். நவ சக்திகளுள் வீரசக்தி கோலம். ராஜகிரீடம் அணிந்த அழகான திருவுருவம். திருக்கரங்களில் கட்கம், வஜ்ராயுதம், கபாலம், டமருகம் ஆகியன கொண்டு தரிசனம் தருகின்றாள். எதிரே பீடமும் சிம்ம வாகனமும் காணப்படுகின்றன. விநாயகர், முருகன், காத்தவராயன், பேச்சியம்மன் ஆகிய பரிவார தெய்வங்களையும் காணலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.