அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோவில் (திருக்கடாவூர் - வெள்ளடை)
God Name : வெள்விடைநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
சுந்தரர் தமது தொண்டர்களுடன் இத்தலம் நோக்கி வரும்போது வெயிலின் கடுமையாலும், பசியைத் தாங்கமாட்டாமலும் கஷ்டப்பட்டார். அவரது துன்பத்தைப் போக்க எண்ணிய சிவபெருமான், வேதியர் வடிவில் வந்து, வழியில் குளிர்ந்த நீர் பந்தல் ஒன்றை அமைத்தார். பொதி சோறும், தண்ணீரும் வைத்துக் கொண்டு காத்திருந்தார். சுந்தரருக்கு அளித்த பொதிசோறு எடுக்க எடுக்க குறையாமல் பெருகியது.
இதைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், உடன் வந்தவர்களுடன் பொதி சோற்றை உண்டு, தண்ணீர் பருகி, களைப்பால் உறங்கினார். விழித்தெழுந்து பார்த்தால் வந்திருந்த வேதியரும், நீர் பந்தலும் மறைந்து விட்டன. பின்னர் வேட வடிவில் காட்சி தந்து, சுந்தரருக்கு வழிகாட்டி விட்டு, கோவிலுக்குள் சென்று மறைந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஆலய முகப்பில் சிவபெருமான் சுந்தரருக்கு உணவு படைப்பதை சுதை சிற்பமாக வடித்துள்ளனர். சுந்தரருக்கு பொதி சோறு அளித்த இடம் இங்கிருந்து 1.5 கி.மீ தூரத்திலுள்ள வரிசைப்பற்று எனும் ஊரும், இடமணல் எனும் ஊரும் இருப்பதைக் காணலாம்.
தை அமாவாசையன்று தீர்த்தவாரி நடைபெறுகையில் ஆலயத்துக் கிணற்று நீர் பால் போல மாறி விடுகிறது.
சுந்தரருக்கு சிவபெருமான் கட்டுச்சோறு அளிப்பதை சித்ரா பௌர்ணமியன்று ஐதீகமாக கொண்டாடுகின்றனர்.
தேவாரத் திருத்தலம்.
மூலவர்: வெள்விடைநாதர், அம்பாள்: காவியங்கண்ணியம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வெள்விடைநாதர். சதுர ஆவுடையாரும் சிறிய பாணமும் கொண்ட அழகிய ஒளி வீசும் லிங்கம். வெள்விடை என்றால் ரிஷபம். ரிஷபம் பூஜித்ததால் வெள்விடைநாதர் என்று பெயர்.
ஸ்வேத ரிஷபேஸ்வரர் என்ற வடமொழிப் பெயரும் உண்டு.
அம்பாள் காவியங்கண்ணியம்மை எனப்படும் நீலோற்பவ விசாலாட்சி அழகான திருவுருவம் கொண்டு தரிசனம் தருகின்றார்.
செல்வ விநாயகர், வள்ளி-தெய்வயானை தேவியர்களுடனாய முருகன், பைரவர், அஷ்டபுஜ துர்க்கை, சிவலோகநாதர், துர்வாசர் மற்றும் மாவடி விநாயகரை தரிசிக்கலாம்.
(கரியமாணிக்கப் பெருமாள் கோவிலொன்றும் இவ்வூரில் இருக்கின்றது)
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.