அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில் (திருமுல்லைவாசல்)
God Name : முல்லைவனநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
கிள்ளி வளவன் எனும் சோழ மன்னன், இப்பகுதியில் வேட்டையாடுவதற்கு, தனது பரிவாரங்களுடன் குதிரையில் வந்து கொண்டிருந்தான். ஓரிடத்தில் குதிரை மேற்கொண்டு பயணிக்காமல் நிற்கவே, அதை துரிதப்படுத்தினான். அப்படியும் நகரவில்லை.
குதிரைகளின் கால்களில் முல்லைக் கொடிகள் சிக்கிக் கொண்டதால் அவற்றால் நகர முடியவில்லை. இதைக் கண்ணுற்ற மன்னன், குதிரையிலிருந்து கீழே இறங்கி, தனது உடைவாளால், முல்லைக் கொடிகளை வெட்டி அப்புறப்படுத்த முற்படுகையில், கொடிகளினூடே ரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்தது. பதறிப்போன மன்னன், கொடிகளை அகழ்ந்து பார்த்ததில், சிவலிங்கம் புதையுண்டு இருப்பது தெரிய வந்தது.
இறைவன் மீது வாளை வீசி சிவ அபராதம் செய்து விட்டோமே என மனம் நொந்த மன்னனை தேற்றி, அவனுக்குக் காட்சி தந்தார் இறைவன் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சென்னையில் ஒரு திருமுல்லைவாயில் இருப்பதால், பெயரை வேறுபடுத்திக் காட்டுவதற்காக இத்தலத்தைத் தென் திருமுல்லைவாயில் என்று அழைக்கின்றனர்.
மூலவர்: முல்லைவனநாதர், அம்பாள்: அணி கொண்ட கோதையம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார் முல்லைவனநாதர். சுயம்பு மூர்த்தம்.
மூலவரின் திருமேனியில் இரண்டு வெட்டுப் பள்ளங்கள் காணப்படுகின்றன. அம்பிகை அணி கொண்ட கோதையம்மை அழகின் உருவாக எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்து தட்சிணாமூர்த்தியிடம் அம்பாள் பஞ்சாட்சர உபதேசம் பெற்றதால், 'அணி கொண்ட கோதை' எனும் திருநாமம் பெற்றார். பள்ளி அறையே இல்லாத ஆலயம் இது.
வங்கக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள ஆலயம். வங்கக் கடலுக்கும் கோயிலுக்கும் இடையே சிந்தனைப் பிள்ளையார் எழுந்தருளி தரிசனம் தருகின்றார்.
சுதர்மனும், இந்திரனும் வழிபட்ட ஸ்தலம். கார்க்கோடகனும் இவ்விறைவனைப் பூஜித்துள்ளார். சூர்ய-சந்திர கிரகண நாட்களிலும், மகோதய நாட்களிலும் வழிபட சிறப்பான நாட்கள் என்பர்.
தேவாரத் திருத்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.