அருள்மிகு கலிக்காமேஸ்வரர் திருக்கோவில் (அன்னப்பன்பேட்டை)

God Name : சுந்தரேஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

ஆதியில் வில்வாரண்யம் என்றழைக்கப்பட்ட ஸ்தலம். பராசர மகரிஷி பூஜித்து வழிபட்ட ஸ்தலம். கலி (துன்பம்) நீக்கும் இறைவனின் ஆளுமைக்குட்பட்ட ஊர் என்பதால் திருக்கலிக்காமூர் எனப் பெயர் கொண்டது. தனது தந்தையைக் கொன்ற அசுரனை அழிக்க பெரிய யாகம் ஒன்றை செய்கின்றார் பராசர முனிவர். அந்த யாகத்தில் கிடைத்த பலனைக் கொண்டு அசுரனை அழிக்கின்றார். அசுரனை அழித்த தோஷம் நீங்க, இவ்விறைவனை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார் என ஸ்தல வரலாறு. தீராத வயிற்று வலி கொண்டு அவதியுற்ற வணிகன் ஒருவன், சிவஸ்தலங்களுக்கு யாத்திரை போய்க் கொண்டிருந்த வேளையில் இத்தலம் வந்து, ஸ்வாமியையும், அம்பாளையும் வழிபட்டான். அவனது வயிற்று வலி நீங்கி பூரணமாக சுகமடைந்தான். தேவாரத்திருத்தலம்
மூலவர்: சுந்தரேஸ்வரர், அம்பாள்: அழகம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சுந்தரேஸ்வரர். சுயம்பு லிங்க மூர்த்தம். கலிக்காமேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. பெயருக்கேற்றபடி அழகம்மையாக விளங்கும் அம்பாள் மிகுந்த வரப்பிரசாதி. சுந்தராம்பாள் என்ற பெயரும் உண்டு. கிழக்கு பார்த்த சந்நிதிகள். ஸ்தல விநாயகராக சித்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார். பிரகார வலச்சுற்றில் வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், அஷ்டபுஜ துர்க்கை, விஸ்வநாதர், அகிலாண்டேஸ்வரி, கஜலட்சுமி, பராசர மகரிஷி ஆகியோரின் திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.