அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோவில் (திருநாங்கூர்)
God Name : மதங்கீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
இத்தலத்தில், மதங்கர் எனும் முனிவர் தவம் மேற்கொண்டார். பிரத்யட்சமான சிவபெருமானிடம், இத்தலத்தில் வழிபட்டு
பூஜிப்பவர்களுக்கு தர்மார்த்த காம மோட்சம் கிட்ட வேண்டும் என்று பிரார்த்தித்தார். பின்னர் லலிதாம்பிகையைக்
குறித்து தவம் மேற்கொண்டார். பஞ்சதசி எனும் மந்திரத்தை அக்ஷரலட்சம் ஜெபித்தார். ப்ரத்யட்சமான அம்பிகையிடம்
தனக்கு புத்ரியாகப் பிறந்து தனது ஆஸ்ரமத்தில் வளர்ந்து, சிவபெருமானை மணக்க வேண்டும் என வேண்டுகோள்
விடுத்தார்.
யோக மாயையான மந்திரிணி தேவி பரமேஸ்வரனை மணப்பாள் என்றும், மீண்டும் அவள் - உன் பிள்ளைக்கு புத்ரியாக
அவதரிக்கும் காலத்தில் ஸ்வேதநாதரை மணப்பாள் என்றும் வரமளித்தாள் அம்பிகை.
திருவெண்காட்டு இந்திர விழாவில் மருத்துவாசுரனின் சம்ஹாரத்தின்போது நந்தியை அனுப்பியதால் இத்தலத்து நந்தி
திருவெண்காட்டை நோக்கியபடி உள்ளதாக கூறப்படுகிறது.
முன்நாளில் சித்ரா பௌர்ணமி சமயத்தில் 11 தலத்து ரிஷப சேவை நடைபெற்று வந்ததாக குறிப்பு ஒன்று கூறுகிறது.
தேவார வைப்புத்தலம் - ஏகாதச ருத்ர பீடங்களுள் - தத்புருஷ பீடம்.
ஏகாதச ருத்ர பீடங்கள் தோன்றிய வரலாறு:
சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தை தராமலும், அவமானப்படுத்தி தட்சன்
செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக்
கொள்ளாமல் செருக்குடன், யாகத்தை தொடர்ந்து நடத்தினான் தட்சன்.
யாகத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக் கொண்டாள்
பார்வதி.
நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.
உக்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி,
ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும் போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி
ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக் கொண்டிருந்தனர். இதுவே ருத்ர பீடங்கள் தோன்றிய
வரலாறு.
மூலவர்: மதங்கீஸ்வரர், அம்பாள்: மதங்கீஸ்வரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் மதங்கீஸ்வரர். தேஜோமய திருமேனி. சுயம்பு மூர்த்தம்.
மதங்கீசர் என்றும் அழைப்பர். மதங்க முனிவர் தவமிருந்து வழிபட்டதால், மதங்கீசர் எனும் திருநாமம்.
அம்பாள் மதங்கீஸ்வரி, தெற்கு நோக்கி தனி சந்நிதி கொண்டுள்ளார். மிகவும் அழகான திருவுருவம். மை தீட்டப்பட்ட
கண்களை உடையதால் அஞ்சனாட்சி என்றும், கிளியைக் கையில் கொண்டதால் சுக ஹஸ்தை எனவும், மதங்க
முனிவர்க்கு புத்ரியாகப் பிறந்ததால் மதங்கீஸ்வரி என்றும் பெயர்கள் கொண்டார்.
இவள் சரஸ்வதிக்கு குருவாக இருந்து கல்வி உபதேசம் செய்தவள் என்பதால் ஸ்ரீ ராஜமாதங்கி என்றும் போற்றுவர்.
இத்தலத்தில் ஸ்ரீமன் நாராயணன் மோகினி அவதார வடிவில், சங்கு-சக்கரம், ஆனந்த முத்திரை ஆகியன கொண்டு
சேவை சாதிக்கின்றார். வலஞ்சுழி மாதங்க விநாயகர் எழுந்தருளி அருள் வழங்குகிறார்.
கோஷ்டத்து மூர்த்தங்களுள் யோக பிரம்மாவின் திருவுருவம் அழகாக இருக்கின்றது. அஷ்ட புஜங்களோடு, அமர்ந்த
கோலத்தில், ஊஞ்சலில் அசைந்தாடிக் கொண்டு காட்சி தரும் மாகாளியம்மன் மனதை விட்டு அகலாத அற்புதமான
திருவுருவம். ஆனந்த வடபத்ர காளியம்மன் என்பார்கள்.
திருவெண்காட்டீசரை நோக்கி கிழக்கு முகமாக ஒரு நந்தியும், மதங்கீஸ்வரரை நோக்கி மேற்கு முகமாக ஒரு நந்தியும்
என இரட்டை நந்தி தேவர்கள் எதிரும் புதிருமாக அமர்ந்துள்ளதால் விசேஷ பிரதோஷ ஸ்தலமாக விளங்குகிறது.
திருவெண்காட்டீசரை பிரம்மவித்யாம்பிகை மணந்து கொண்டது இந்த ஆலயத்தில்தான் என்கின்றனர்.
ஸ்ரீ ராஜமாதங்கியை உபாசிப்பவர்கள் அடையமுடியாதது எதுவுமில்லை என சியாமளா தண்டகத்தில் காளிதாசன்
குறிப்பிட்டுள்ளார். அஷ்டமி நாட்களில் வழிபடுவோர்க்கு திருமணத் தடை நீங்கப் பெறும். லலிதா சஹஸ்ரநாமத்திற்கு
பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர் மற்றும் முத்துஸ்வாமி தீட்சிதர் இருவரும் ராஜமாதங்கியின் உபாசகர்கள். ராஜமாதங்கி
சந்நிதி முன்பாக அமர்ந்து குழந்தைகளுக்கு அக்ஷராப்யாசம் செய்வார்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.