அருள்மிகு வைகுந்தநாதர் திருக்கோவில் (திருநாங்கூர் - திரு வைகுந்த விண்ணகரம்)
God Name : மூலவர்: வைகுந்த நாதன்் உற்சவர்: தாமரைக்கண்ணன்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
உபரிசரவஸு, உதங்க மகரிஷி இருவருக்கும் பிரத்யட்சமான கோலத்திலேயே நமக்கும் தரிசனம் தருகின்றார். பரமபதத்திலுள்ள விரஜா நதியே இங்கு தீர்த்தமாக இருப்பதால் பூலோக வைகுந்தம் என போற்றுகின்றனர். ஸ்வேதகேது எனும் அரசன் நீண்ட காலம் தவமிருந்து வைகுண்டநாதரின் தரிசனம் பெற்றார் என ஸ்தல வரலாறு.
உதங்க மகரிஷி மற்றும் உபரிசரவஸு இருவரும் முக்தியடைந்த ஸ்தலம். விண்ணகரம் என்றால் விஷ்ணு கிரகம். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று - நாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று - ஐந்து விண்ணகரங்களுள் ஒன்று.
ஏகாதச ருத்ர பீடங்களுள் - பீம பீடம். மூலவர்: கைலாஸநாதர்.
11 திவ்ய தேச ஸ்தலங்கள் தோன்றிய வரலாறு:
சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தை தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக் கொள்ளாமல் செருக்குடன் யாகத்தை தொடர்ந்து நடத்தினான் தட்சன். யாகத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக் கொண்டாள் பார்வதி.
நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். உக்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும் போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக் கொண்டிருந்தனர்.
11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்று பயந்த முனிவர்கள், திருமாலை சரண் அடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களை சாந்தப்படுத்தினார் என ஸ்தல வரலாறு.
சினம் தணிந்த சிவபெருமான், ஒவ்வொரு வடிவத்தையும் - ஒருவருக்குள் ஒருவராக செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு திருமாலும் எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாக திருமால் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.
ஸ்ரீ வண்புருஷோத்தமம், ஸ்ரீ வைகுந்த விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திரு அரிமேய விண்ணகரம் ஆகிய திவ்ய தேசங்களில் மணவாள மாமுனிகள் மங்களாசாஸன உற்சவத்திற்கு எழுந்தருளுகிறார்.
மூலவர்: வைகுந்த நாதன்் உற்சவர்: தாமரைக் கண்ணன்் தாயார்: வைகுந்த வல்லி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ வைகுந்தநாதர் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த கோலத்தில் மூலவராக சேவை சாதிக்கின்றார். வலது கால் மடக்கி, இடது காலை கீழே தொங்க விட்டு, தாமரைபீடத்தில் அமர்ந்த கோலம். ஆதிசேஷன் குடையாக இருக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
உற்சவர் தாமரைக்கண்ணன் எழிலான திருமேனி. தாயார் வைகுந்தவல்லி தனி சந்நிதி கொண்டுள்ளார். பிரகாரத்தில் சக்கரத்தாழ்வாரை சேவிக்கலாம். மூலவர் இருக்கும் கோலத்திலேயே உற்சவ மூர்த்தங்களும் உள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.