அருள்மிகு பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவில் (திரு பார்த்தன்பள்ளி)
God Name : மூலவர்: தாமரையாள் கேள்வன், உற்சவர்கள்: பார்த்தசாரதி, கோலவல்லி ராமன்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
பார்த்தனுக்காக ஏற்பட்ட கோவில் என்பதால் இவ்வூர் பார்த்தன்பள்ளி எனப் பெயர் கொண்டது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் குருக்ஷேத்ரத்திலிருந்து வந்தவர் என்று கூறுகின்றனர்.
அகஸ்தியர், கௌதமர், பரத்வாஜர் ஆகிய ரிஷிகள் தவமியற்றிய ஸ்தலம். பிரம்மஹத்தி தோஷம் கொண்ட வருணன் இத்தலத்தில் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றதாக ஸ்தல வரலாறு.
அர்ச்சுணனுக்கு ஏற்பட்ட தாகவிடாய் தீர்க்க, கண்ணனே தன் கையிலுள்ள கத்தியால் பூமியை துளையிட்டு தீர்த்தம் உண்டாக்கினார். தாகவிடாய் தீர்ந்ததும், அர்ச்சுணன் கண்ணனிடம் ஞான உபதேசம் பெற்றதாக ஸ்தல வரலாறு.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - திருநாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று.
11 திவ்ய தேச ஸ்தலங்கள் தோன்றிய வரலாறு:
சிவபெருமானை - யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தை தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக் கொள்ளாமல் செருக்குடன், யாகத்தை தொடர்ந்து நடத்தினான் தட்சன்.
யாகத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக் கொண்டாள் பார்வதி.
நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார்.
உக்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும் போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக் கொண்டிருந்தனர்.
11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்று பயந்த முனிவர்கள், திருமாலைச் சரணடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களை சாந்தப்படுத்தினார் என ஸ்தல வரலாறு.
சினம் தணிந்த சிவபெருமான், ஒவ்வொரு வடிவத்தையும் - ஒருவருக்குள் ஒருவராக செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாக திருமால் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.
மூலவர்: தாமரையாள் கேள்வன், உற்சவர்கள்: பார்த்தசாரதி, கோலவல்லி ராமன், தாயார்: தாமரை நாயகி.
மூலஸ்தானத்தில் மூலவர் தாமரையாள் கேள்வன் மேற்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். மூலவரின் கரத்தில் கத்தி ஒன்று இருக்கின்றது. ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியர்கள் உடன் உள்ளனர்.
உற்சவர் பார்த்தசாரதி எழிலான திருமேனியுடன் சேவை சாதிக்கின்றார். சங்கு-சக்கர-கதா பாணி. ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவியர்கள் உடன் உள்ளனர்.
தாமரை நாயகித் தாயாருக்கு கமலவல்லி என்றொரு திருநாமம்.
கோலவல்லிராமன் எனும் மற்றோர் அழகிய உற்சவர் சேவை சாதிக்கின்றார். வில்-அம்பு சார்த்தப்பட்டுள்ளது.
இவரது மூலவர் தனியே ஒரு தோப்பில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். பார்த்தனுக்கும் ஒரு சந்நிதி உள்ளது.
பார்த்தன், வருணன், ஏகாதச ருத்ரர்கள் ஆகியோர்க்கு பிரத்யட்சம் ஆனதாக ஐதீகம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.