அருள்மிகு வீர நரசிங்கர் திருக்கோவில் (மங்கைமடம்)
God Name : வீர நரசிங்கப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
திருவாலி எனும் சிற்றூரை ஆண்ட திருமங்கை மன்னன், மங்கைமடத்தை தலைமையிடமாகக் கொண்டிருந்தான். வைணவ கோட்பாட்டினை பின்பற்றவும், குமுதவல்லியின் விருப்பத்தை பூர்த்தி செய்யவும், இங்கே 1008 வைணவர்களுக்கு ததியாராதனம் அளித்தான் திருமங்கை மன்னன். சுற்றிலுமுள்ள ஊர்களில் வாழை மற்றும் காய்கறி பயிரிட்டு அன்னதானத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டான். சோழ ராஜாவிற்காக வசூல் செய்த கப்பப்பணம் முழுவதும் இதற்கே செலவிட்டான் என ஸ்தல வரலாறு கூறுகிறது. தை அமாவாசையன்று, திருநகரியிலிருந்து புறப்பட்டு குறையலூர், மங்கைமடம், நாங்கூர் ஆகிய ஸ்தலங்களை மங்களாசாசனம் செய்வார். நாங்கூரின் பஞ்ச நரசிம்ம க்ஷேத்ரங்களையும் திருமங்கை ஆழ்வார் பூஜித்து வழிபட்டுள்ளார். இது நாங்கூர் பஞ்ச நரசிம்ம க்ஷேத்ரங்களுள் ஒன்றாகும்.
மூலஸ்தானத்தில் வீர நரசிங்கப் பெருமாள் மூலவராக சேவை சாதிக்கின்றார். பிரகாரத்தில் தனிக்கோவில் நாச்சியார், பெரிய திருவடி, சிறிய திருவடி மற்றும் ஆழ்வார்களின் சிலா வடிவங்கள் உள்ளன. ஆழ்வார் - குமுதவல்லி அர்ச்சா விக்ரகம் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.