அருள்மிகு சாய்க்காட்டுடையார் திருக்கோவில் (திருசாய்க்காடு - சாயாவனம்)
God Name : ரத்னசாயாவனேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களுள் ஒன்று. யானை புகாத வாசல் கொண்டுள்ளது. கோவிலை ஒட்டி தேர் போன்ற விமானம் சக்கரத்துடன் காணப்படுகின்றது. இந்திரன் இக்கோவிலை விண்ணுலகு எடுத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது.
மாடக்கோவில் என்பது யானை ஏறாத வண்ணம் பூமி மட்டத்திற்கு மேல் படிக்கட்டுக்களை உயரமாக அமைத்து கட்டப்படுவதை குறிப்பதாகும். கோச்செங்கட்சோழன் கட்டுவித்த கோவில்கள். கட்டுமலைக்கோவில் என்றும் கூறுவார்கள்.
பசுமையான கோரைக்கு பைஞ்சாய் எனப் பெயர். கோரை மிகுந்த ஸ்தலம் ஆதலால் சாய்க்காடு எனப் பெயர் கொண்டது.
இந்திரனின் தாய் அதிதி பூலோகத்திற்கு வந்து இவ்விறைவன் சாயாவனேஸ்வரரை வழிபட ஆசைப்பட்டாள். தாயின் ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில, இந்திரன் தனது ஐராவதம் பூட்டிய தேரைக் கொண்டு, இவ்வாலயத்தை இழுத்துக் கொண்டு இந்திரலோகம் நோக்கி புறப்பட முற்பட்டான். இச்செயலை அவனது தாயான அதிதி தடுத்து, தானே இங்கு வந்து பூஜிக்கத் தொடங்கினாள் என ஸ்தல வரலாறு.
கோவிலை தேர் கொண்டு இழுத்தபோது அம்பாள் குயில் போலக் கூவியதால், குயிலினும் நன்மொழி அம்மை எனப் பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.
இயற்பகை நாயனார் முக்தி பெற்ற ஸ்தலம்.
தேவாரத்திருத்தலம், சப்த வனங்களுள் ஒன்று - சாயாவனம்.
காசிக்கு சமமாக சொல்லப்படும் ஆறு ஸ்தலங்களுள் ஒன்று.
மூலவர்: ரத்ன சாயாவனேஸ்வரர், அம்பாள்: குயிலினும் நன்மொழி அம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக எழுந்தருளியுள்ளார் ரத்ன சாயாவனேஸ்வரர். திருசாய்க்காட்டுடையார் என்றும் கூறுவர். சுயம்பு லிங்க மூர்த்தம். அன்னை குயிலினும் நன்மொழி அம்மை அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். கோஷாம்பாள் என்ற பெயரும் உண்டு. கோஷ்ட மூர்த்தங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.
சிறப்பு மூர்த்தமாக வில்லேந்திய வேலன் - பஞ்சலோக விக்ரகம். வில்லை ஏந்தி கம்பீரமாக மயில் முன் நிற்கும் வேலனின் நேர்த்தியான சிலை. காலில் வீரகண்டர மணி அணிந்துள்ளார். கடலில் கிடைத்ததாக கூறுகின்றனர்.
வெளிபிரகாரத்தில் சூரியன், இந்திரன், இயற்பகை நாயனார் ஆகியோரின் திருவுருவங்களை காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.