அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் (வாணகிரி)
God Name : வேதபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
மூலவர்: வேதபுரீஸ்வரர், அம்பாள்: வேதாந்த நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் மூலவரான ஸ்ரீ வேதபுரீஸ்வரர். அழகான பெரிய திருமேனியுடன் கம்பீரமாக தரிசனம் தருகின்றார். அன்னை வேதாந்த நாயகி உடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.
வேதங்களின் ஓசைகளும் அதனால் விளைந்த நன்மைகளும் கிடைக்கப்பெற்ற ஊர். வேதம் ஓதும் பெரியவர்கள் நிறைந்திருந்த ஊர். இதனால் காவிரிப்பூம்பட்டினத்தின் வேதபுரி எனப் போற்றப்பட்ட ஊர். இத்தகைய ஊரில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருநாமம் வேதபுரீஸ்வரர் - இறைவியின் பெயர் வேதாந்த நாயகி.
முதன்மை வாசலான தெற்கு வாசல் வழியே ஆலயத்துள் சென்று, வரசித்தி விநாயகரை தரிசித்து ஆசி பெற்று, பின்னர் வலச்சுற்றில் - ஸ்தல விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய சுப்ரமண்யன், சூர்ய பகவான், சனீஸ்வர பகவான், க்ஷேத்ர பாலகர், பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். சிவத்யானம் செய்து கொண்டு அமைதியாக அமர்ந்துள்ள சண்டிகேஸ்வரரின் திருவுருவம் அழகாக இருக்கின்றது.
தெற்கு வாசலருகே அரசமரமும் - வேப்பமரமும் பின்னி பிணைந்து வளர்ந்துள்ளன. புத்ர பாக்யம் வேண்டி வேதபுரீஸ்வரரிடம் பிரார்த்தித்த தம்பதியினர், வேத சாஸ்திர முறைப்படி இவ்விருட்சங்களை நட்டு, கல்யாண வைபவமும் நடத்தி வைத்தனர். இறைவனருளால் அவர்களுக்கு குழந்தை பிறந்தது.
அக்ரஹாரத்தின் கீழ்க்கோடியில் அமைந்திருப்பது மீனாட்சி சமேத உத்தர சோமசுந்தரேஸ்வரர் கோவில். வாணகிரி ஊருக்குள் நுழைந்ததும் நாம் தரிசிப்பது ஸ்வேத விநாயகரை, அடுத்து லட்சுமி நாராயணப் பெருமாள்.
மூலஸ்தானத்தில் லட்சுமி நாராயணப் பெருமாள், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, சேவை சாதிக்கின்றார். மஹாலட்சுமியை தனது மடி மீதமர்த்தி ஆலிங்கன நிலையில் தரிசனம் தருகின்றார்.
சிறிய திருவடியான ஆஞ்சநேயஸ்வாமி தக்ஷிணாபிமுகனாய் நின்று சேவை சாதிக்கின்றார். மழை பொய்க்கும் காலங்களில், இவருக்கு 108 குடங்களின் நீரை திருமஞ்சனம் செய்தால், கண்டிப்பாக மழை பெய்யும் என ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.