அருள்மிகு புரந்தரேஸ்வரர் திருக்கோவில் (பாகசாலை)
God Name : புரந்தரேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
பாகசாதனன் என்ற பெயருடைய தேவேந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்ள இங்கு யாகசாலை அமைத்து யாகங்கள் பல செய்தான். இதனால் யாகசாலை எனப் பெயர் கொண்டு, பின்னர் மருவி பாகசாலை என்றானது.
கௌதம முனிவர் தந்த சாபத்தினால் மேனி முழுவதும் ஆயிரம் குறிகள் கொண்ட இந்திரன், இவ்விறைவனை வழிபட்டு ஆயிரம் குறிகளையும் ஆயிரம் கண்களாக மாற்றிக் கொண்டான்.
புரந்தரன் என்பது இந்திரனின் மற்றொரு பெயர். அவன் வழிபட்டதால் ஸ்வாமிக்கு புரந்தரேஸ்வரர் எனப் பெயர் வந்தது.
மூலவர்: புரந்தரேஸ்வரர், அம்பாள்: கல்யாணி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் புரந்தரேஸ்வரர். கம்பீரமாக தரிசனம் தரும் அழகிய சிவலிங்கம். சித்திரை மாதம் 11, 12, 13 தேதிகளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் இறைவன் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
அம்பாள் கல்யாணி அழகே உருவாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
விசாலாட்சி சமேத விஸ்வநாதர், வள்ளி-தேவசேனா சமேத முருகப் பெருமான், துர்க்கை, சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், நந்தியம் பெருமான் ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.