அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோவில் (குறுமாணக்குடி)
God Name : கண்ணாயிரமுடையார்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
அகலிகையை அடைய இந்திரன் கையாண்ட வழிகளுக்காகவும், அவனது தீய புத்திக்கு பாடம் புகட்டவும், கௌதம ரிஷி கொடுத்த சாபத்தினால், உடம்பெல்லாம் ஆயிரங் கண்கள் பெற்ற தேவேந்திரன், இத்தலம் வந்து தவமிருந்து, இவ்விறைவனை வழிபட்டு, சாப விமோசனம் பெற்றான் என ஸ்தல வரலாறு.
இந்திரனின் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவன் கொண்டிருந்த ஆயிரம் கண்களையும், தாமே ஏற்றுக் கொண்டு, அவனுக்கு சாப விமோசனம் தந்தமையால், ஸ்வாமி திருக்கண்ணாயிரமுடையார் எனப் பெயர் கொண்டார்.
வாமனர் வடிவில் மாபலியிடம் போகும் முன் திருமால் இவ்விறைவனை வழிபட்டார். இதனால் குறுமாணக்குடி எனப் பெயர் கொண்டது.
தேவாரத்திருத்தலம்.
மூலவர்: கண்ணாயிரமுடையார், அம்பாள்: முருகு வளர் கோதை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான கண்ணாயிரமுடையார். உயரமான பாணம் கொண்டு கம்பீரமாக தரிசனம் தருகின்றார். திருமேனி முழுவதும் கண்கள் போன்று பள்ளங்கள் உள்ளன. சுயம்பு லிங்க வடிவம். சஹஸ்ரநேத்ரேஸ்வரர் என்று போற்றுவார்கள்.
விமானமும் ஸ்வாமி சந்நிதியும் ஒரு சேர தரிசிக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
அம்பாள் முருகு வளர் கோதை அழகான திருவுருவம். தனி சந்நிதி கொண்டுள்ளார். சுகந்த குந்தளாம்பிகை என்ற பெயரும் உண்டு. அம்மன் சந்நிதி விமானத்தில் 12 ராசிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
பலி பீடத்தின் கிழக்கே பைரவர், சனீஸ்வரர், சூரிய-சந்திரர்கள், நால்வர் ஆகிய மூர்த்தங்களும், மகாமண்டபத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சுப்ரமண்யர், சிவகாமி உடனாய நடராஜர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.