அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் (மயிலாடுதுறை)
God Name : காசி விஸ்வநாதர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
நீத்தார் கடன் தீர்க்க அனேகர் வருகின்றனர். ஐப்பசி மாதக் கடைசியில் காவிரியில் நீராடும் கடைமுழுக்கு இங்கு விசேஷமானது. கங்கையில் குளித்த புண்ணியம் கிட்டும்.
"ஆயிரம் ஆனாலும் மாயூரம் போல ஆகுமா?" என்ற பழமொழிக்கு ஏற்ப விளங்குகிறது.
மூலவர்: காசி விஸ்வநாதர், அம்பாள்: விசாலாட்சி.
கொடிமரத்தருகே எழுந்தருளியுள்ள ஸ்வேத விநாயகரிடம் ஆசி பெற்று ஆலயத்தினுள் செல்லலாம். பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டவர் என்பதால் மிகவும் அழகாகக் காட்சியளிக்கிறார். காசியைப் போன்றே இங்கே துண்டி விநாயகரும் பைரவரும் எழுந்தருளியுள்ளனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் காசி விஸ்வநாதர். ஒளி வீசும் லிங்கம். அன்னை விசாலாட்சி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறாள். சுவாமி-அம்பாள் திருமேனிகள் மிகவும் அழகானவை. கேதார்நாத் போன்று விமான அமைப்பு உள்ளது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட கட்டுமலையில் விநாயகர், தண்டாயுதபாணி, மயில் ஏறிய சுப்ரமண்யர் ஆகிய மூர்த்திகளை தரிசிக்கலாம்.
இவ்வாலயத்தினருகில் காசிக்கு ஒப்பான ஸ்நான கட்டங்கள், விஷ்ணு பாதம் ஆகியன அமைக்கப்பட்டுள்ளது. அறுகோண வடிவில் தீர்த்தம் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.