அருள்மிகு பரிமளரங்கநாதர் திருக்கோவில் (திரு இந்தளூர்)

God Name : மூலவர்: பரிமளரங்கர், உற்சவர்: மருவினிய மைந்தன்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

தட்சனின் சாபத்திற்கு ஆளான சந்திரன் க்ஷயரோகம் கொண்டு கஷ்டப்பட்டான். இத்தலத்திற்கு வந்து பெருமாளை சேவித்து, நோய் நீங்கப் பெற்றான். இந்து என்பது சந்திரனின் மற்றொரு பெயர். இந்து வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதால் இவ்வூர் இந்தளூர் என அழைக்கப்படலாயிற்று. மது, கைடபர் எனப்படும் இரண்டு அசுரர்களிடம் அகப்பட்டுக் கொண்ட வேதங்கள் நான்கும் துர்கந்தம் அடைந்தன. தாங்கள் கொண்ட துர்நாற்றம் நீங்கப் பெற, காவிரியில் நீராடி, பரிமள ரங்க நாதரை வேண்டி சுகந்தம் பெற்றன. இதனால் பெருமாளுக்கு பரிமள ரங்கர் எனும் திருநாமம். அம்பரீஷன் எனும் அரசன், ஏகாதசி விரதம் பூண்டு, விரத நெறிமுறைகளை முறையாக பின்பற்றுபவன். ஏகாதசி விரதம் முடித்து துவாதசி நேரம் முடிவதற்குள் உண்ணுவது வழக்கம். இந்த விரதத்தை தடுத்து அவனை பங்கப்படுத்த விரும்பினார் துர்வாச முனிவர். தான் நீராடிவிட்டு வந்து உணவு உட்கொள்வதாக கூறிச் சென்ற துர்வாசர், வேண்டுமென்றே தாமதப் படுத்தினார். விரதபங்கம் ஏற்படாதிருக்க பெரியவர்களின் யோசனைப்படி, உள்ளங்கையில் தீர்த்தம் வைத்து மூன்று முறை அருந்துகிறான். இதை கேள்வியுற்ற துர்வாசர், பூதத்தை அம்பரீஷன் மீது ஏவுகிறார். ரங்கனிடம் தஞ்சம் புகுந்தான் அம்பரீஷன். துர்வாசரின் கர்வத்தை அடக்கி அம்பரீஷனுக்கு உதவுகிறார் பெருமாள். அம்பரீஷன் 100 விரதங்களை நிறைவு செய்கிறான். தம்மை ஒரு கைங்கர்யத்திற்கும் நியமித்தருளாத பெருமாள் - பாராமுகம் கொண்டவர் என நிந்தித்து பதிகம் பாடுகிறார் திருமங்கை ஆழ்வார். நீ நிந்தித்தாலும் பரவாயில்லை பாடிக் கொண்டே இரு என அரங்கன் அமைதியாக இருக்கிறார். 'பரிமளரங்கநாதம்' எனத் தொடங்கும் முத்துஸ்வாமி தீட்சிதரின், அமீர் கல்யாணி ராகத்தில் பாடப்படும் கீர்த்தனை பரிமளரங்கநாதரை நமது நெஞ்சில் நிறுத்தும். 108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பஞ்சரங்க க்ஷேத்திரங்களுள் ஒன்று.
மூலவர்: பரிமளரங்கர், உற்சவர்: மருவினிய மைந்தன், தாயார்: பரிமள ரங்க நாயகி. மூலஸ்தானத்தில் ஸ்ரீ பரிமள ரங்கநாதர் மூலவராக சேவை சாதிக்கின்றார். சிரத்திற்கு வலக்கரத்தை தலையணையாக வைத்து, இடது கரத்தை இடது காலில் பதித்து, மற்ற இரு கரங்களில் சங்கு-சக்கரம் தரித்து சயனித்திருக்கும் பரிமள ரங்கநாதரின் பாதாதி கேச தரிசனம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். நவ சயனங்களுள் இது வீரசயனம் என்பர். மூலவரின் திருமேனி பச்சை மரகதக் கல்லால் உருவானது. தெற்கில் தலை வைத்து கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சயனித்திருக்கின்றார். திருமுகத்தை சூரிய பகவானும், திருவடிகளை சந்திரனும், நாபிக்கமலத்தை பிரம்மாவும் துதித்த வண்ணமாக காட்சி தருகின்றனர். தெற்கில் காவிரியும், வடக்கில் கங்கையும் பெருமாளை தொழுகிறார்கள். காவிரிக்கு கங்காதிக்கம் இங்கு அளித்ததாக ஐதீகம். திருவடிகளருகே இமயனும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அர்ச்சிக்கும் நிலையில் காட்சி தருகின்றனர். சுகந்தாரண்ய க்ஷேத்திரத்தில் எழுந்தருளியிருப்பதால் இவருக்கு சுகந்தவனநாதர் என்ற திருநாமமும், வேதங்களே விமானத்தின் வடிவில் இருப்பதால் வேதாமோதன் என்றும், சந்திர சாப விமோசனப் பெருமாள் என்ற திருநாமத்தையும் கொண்டுள்ளார். சந்திரன் மற்றும் காவிரிக்கு பிரத்யட்சமானவர் என்பது ஐதீகம். தாயார் பரிமள ரங்க நாயகி தனி சந்நிதி கொண்டுள்ளார். சுகந்தவன நாயகி, சந்திர சாப விமோசன வல்லி, புண்டரீக வல்லி ஆகிய திருநாமங்களும் உண்டு. உற்சவ மூர்த்தியான மருவினிய மைந்தன் என்கிற சுகந்தவன நாதன் பேரழகுடன் சேவை சாதிக்கின்றார். சுதர்ஸன ஆழ்வார், ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர் ஆகியோரை தனித்தனி சந்நிதிகளில் சேவிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.