அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (திரு அன்னியூர் - பொன்னூர்)
God Name : மூலவர்: ஆபத்சகாயேஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதனால் வீரபத்ரரால் தண்டிக்கப்பட்ட அக்னி தேவன் தனது சாபத்தைப் போக்கிக் கொள்ள, அக்னி தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, இவ்விறைவனை வழிபட்டு நற்பலன்கள் பெற்றான்.
கணவனை இழந்த ரதி மீது இச்சை கொண்ட சூரியன் ரதியினால் சபிக்கப்பட்டு தனது வலக்கரத்தைப் பின்னமாக்கிக் கொண்டான். இவ்விறைவனை பூஜித்து இழந்த கையை மீண்டும் பெற்றான்.
அரிச்சந்திரனுக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயரைக்கொண்டார்.
பாண்டவர்களுக்கு ஸ்தல விருட்சமருகே காட்சி தந்த இறைவன் என்பதால் பாண்டவேஸ்வரர். அக்னி வடிவில் இருப்பதால் அக்னீஸ்வரர் என திருநாமம் கொண்டார்.
தாரகன் எனும் ராட்சஸன் அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அவனை அழிக்க சிவபெருமானை அணுகிய தேவர்கள், அவர் யோகத்தில் இருப்பதைப் பார்த்து, அவரது யோகத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினர். யோகம் கலைந்ததால் கோபம் கொண்ட இறைவன் மன்மதனை எரித்தார். இழந்த கணவனை மீட்டுத் தர வேண்டி ரதி பிரார்த்தித்து தவம் இருந்தாள். இறைவனருளால் உயிர் பிழைத்த மன்மதன் ரதி தேவியுடன் சேர்ந்து வழிபட்டான் என ஸ்தல வரலாறு.
மூலவர்: ஆபத்சகாயேஸ்வரர், அம்பாள்: பெரிய நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஆபத்சகாயேஸ்வரர். லிகுசாரண்யேஸ்வரர், அக்னீஸ்வரர், பாண்டவேஸ்வரர், ரதீஸ்வரர் ஆகிய திருநாமங்களும் உண்டு. சுயம்பு லிங்க மூர்த்தம். கிழக்கு பார்த்த சந்நிதி.
பங்குனி மாதம் 24 முதல் 28 வரை ஐந்து நாட்களுக்கு சூரிய பகவானின் ஒளிக்கதிர்கள் மூலவரின் மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன.
அம்பாள் பெரிய நாயகி எனப்படும் பிரஹந்நாயகி தெற்கு பார்த்த தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
அம்பாளுக்கு அபிஷேகம் செய்து, தயிர்சாத நைவேத்தியம் செய்யும் நேர்த்திக்கடன்கள் வழக்கத்திலுள்ளன.
அக்னிக்கு காட்சி கொடுத்த ஆதிமூல லிங்கத்தை பிரகாரத்தில் தரிசிக்கலாம்.
பிரகார வலச்சுற்றில் விநாயகர், சூரிய-சந்திரர்கள், சிவகாமி உடனாய நடராஜப் பெருமான், துர்க்கை, ஆடிப் பூர அம்மன், அஸ்திரத் தேவர், சந்திரசேகரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
காதுகளில் வட்ட வடிவ காதணி அணிந்த அழகிய முருகன் காட்சி தருகின்றார். வள்ளி-தெய்வயானை உடன் உள்ளனர்.
ஆதிசங்கரர் சந்நிதியும் இருக்கின்றது. பாஸ்கர க்ஷேத்ரம், பானு க்ஷேத்ரம் என்றெல்லாம் போற்றப்படும் ஸ்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.