அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில் (காளி)
God Name : ஸ்ரீநிவாசப் பெருமாள்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
ஆதியில் இவ்வூர் ஸ்ரீநிவாசபுரம் என்றே அழைக்கப்பட்டது. இவ்வூரைச் சேர்ந்த காளியை முறையாக வழிபடாததால், அவள் உக்ர காளியானாள். மக்கள் நோய்வாய்ப்பட்டு அவதியுற்றனர். ஸ்ரீநிவாசரிடம் முறையிட்டு காரணம் கேட்டபோது, காளியை முறையாக வழிபடும்படி கூறினார். மக்களும் காளியை முறையாக வழிபட ஆரம்பித்தனர். அன்றிலிருந்து ஸ்ரீநிவாசபுரம் என்ற பெயர் மாறி காளி என்றானது.
அர்த்த மண்டபத்தின் வாசலின் இரண்டு பக்கங்களிலும், கருங்கல் சிலைகளாக கம்பீரமாக நின்று காவல்காக்கும் துவாரபாலகர்களான மணிகன்-பிரபந்தன் அழகு சிற்பங்களாகக் காணப்படுகின்றனர். மூலஸ்தானத்தில் மூலவரான ஸ்ரீநிவாசப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். மேற்கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தியும், கீழ் வலது கரம் வரத முத்திரை கொண்டும், கீழ் இடது கரம் திருவடிகளை சுட்டிக் காட்டியும் காட்சி தரும் அழகான திருமேனி. ஸ்ரீதேவி பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். பெருமாளை நோக்கியபடி பெரிய திருவடி (கருடன்) எழுந்தருளியுள்ளார். மகாமண்டபத்து வாயிலில் விநாயகரையும், மண்டபத்துள் காளிங்க நர்த்தன கிருஷ்ணரையும், ஆழ்வார்களின் திருவுருவங்களையும் சேவிக்கலாம். சுதர்ஸன சக்கரத்தாழ்வாரையும் - நரசிம்மரையும் சேவித்து ஆனந்தம் பெறலாம். பிரதோஷ நாட்களில் பானக நைவேத்தியம் செய்கின்றார்கள். இங்குள்ள பால ஆஞ்சநேயஸ்வாமி மிகுந்த வரப்பிரசாதி. வாலில் மணியும் அஞ்சலி முத்திரையும் காணப்படுகின்றது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.