அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (கொருக்கை)

God Name : மூலவர்: வீரட்டேஸ்வரர், சிறப்பு மூர்த்தம்: காமதகன மூர்த்தி

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

பெரம்பலூர்

Call : +91-

சூரபத்மன், தாரகன், சிங்கமுகன் எனும் மூன்று அசுரர்கள் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் புரிந்தனர். பிரத்யட்சமான பிரம்மனிடம் சாகாவரம் கோரினர். அதை தர மறுத்த பிரம்மனிடம், சிவபெருமானுக்கும் உமையவளுக்கும் பிறக்கும் குமாரனால் மட்டுமே தங்களுக்கு அழிவு உண்டாக வேண்டும் என்ற வரத்தை வேண்டினர். பிரம்மனும் கோரிய வரத்தை தந்துவிட்டார். சிவபெருமான் தவத்தில் ஆழ்ந்திருப்பதாலும், பிரம்மசார்யத்தை கடைபிடிப்பதாலும், அவருக்கு குமாரன் பிறக்க வாய்ப்பில்லை எனக் கருதியே, இந்த வரத்தை கேட்டுப் பெற்றனர். அதன் பிறகு அசுரர்கள் அட்டகாசங்களில் ஈடுபட்டு, தேவர்களின் செல்வங்களை அபகரித்து, பலவழிகளிலும் இம்சித்தனர். இதனால் அவதியுற்ற தேவர்களும், இந்திரனும் சிவபெருமானது யோகநிலை தவத்தை கலைக்க மன்மதனின் உதவியை நாடினார்கள். மன்மதன் என்பதற்கு மனதில் ஆசைகளை வளர்ப்பவன் என்று பொருள். மான் வண்டி, கிளி வாகனம், மகளிர் படை, மீன் கொடி ஆகியவற்றிற்கு உடமையாளன். மான் பூட்டப்பட்ட தென்றல் எனும் தேரில் கரும்பு வில்-மலர் பாணங்கள் கொண்டு வருபவன். இவனுடைய ஆயுதங்களில் உயர்ந்தது மோஹன அஸ்திரமாகும். சிவபெருமான் - பார்வதி மீது மோஹன அஸ்திரங்களை வீசி அவர்களை அன்பு கொள்ள தூண்ட வேண்டும் என்றதும், நடுங்கிப் போனான் மன்மதன். இச் செயலுக்கு இணங்க மறுத்த மன்மதனை பிரம்மன், இந்திரன் ஆகியோர் தொடர்ந்து வற்புறுத்தவே, இணங்கினான். சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்த வனத்திற்கு போய், புன்னை மரங்களின் பின்னால் ஒளிந்து கொண்டு, மலரம்புகளை ஏவினான். தன்னை ஒரு க்ஷணம் மனம் தடுமாறச் செய்தவன் யார்? எனக் கோபங் கொண்ட சிவபெருமான் நெற்றிக் கண்ணை திறந்து அதிலிருந்து வந்த அக்னியால் மன்மதனை சுட்டு எரித்து சாம்பலாக்கி விட்டார். மன்மதன் சாம்பலானதால் துடித்துப் போன ரதி தேவி, தன் கணவனை உயிர்ப்பிக்க வேண்டி, சிவபெருமானிடம் மன்றாடினாள். கருணை கொண்டு அவனுக்கு உயிர் கொடுத்த சிவபெருமான், உருவம் கண்களுக்கு புலப்படாத அநங்கன் ஆக்கிவிட்டார். அவனுக்கு உருவத்தை அளிக்குமாறு ரதி தேவி மீண்டும் வேண்டினாள். அதற்கிணங்கி - கிருஷ்ணருக்கு மகனாக பிறக்கும் வரத்தை அளித்தார். அப்படி பிறந்தவன்தான் பிரத்யும்னன். ரதிதேவியும் மாயாதேவி என்ற பெயரில் பிறந்து பிரத்யும்னனை மணந்தாள். ஒவ்வொரு வருடமும் மாசி மகத்தன்று காமதகனமும், ரதிக்கு அருள் புரிவதும் ஐதீகமாக கொண்டாடி மகிழ்வர். நட்டு வைத்திருக்கும் கரும்பை தீயிட்டு கொளுத்துவார்கள். நல்லதொரு நாளில் மன்மதனை எழுப்பும் படலம் கொண்டாடப்படும். மன்மதனிடம் தேவர்கள் வேண்டிக் கொண்ட இடம் தேவனூர், அதற்கவன் உறுதி பூண்டு கங்கணம் தரித்த இடம் கங்கணம் புதூர். வலது காலை ஊன்றி, இடது கால் வளைத்து குறி பார்த்த இடம் கால்வளைமேடு, வில்லை வளைத்த இடம் வில்லிய நல்லூர். பஞ்ச பாணங்களைவிட்ட இடம் ஐவாணநல்லூர். இறைவன் வெற்றிக் கூத்தாடிய இடம் கூத்தன் வாழ்க்கை. இவையனைத்தும் கொருக்கையை சுற்றியுள்ள கிராமங்கள். மன்மதனை எரித்த இடம் விபூதிக் குட்டை எனும் பெயரில் 1 கி.மீ தொலைவிலுள்ளது. பூமியில் தோண்டத் தோண்ட வெண்மையான விபூதி கிடைக்கும். தீர்க்கவாகு எனும் முனிவர் அபிஷேகம் செய்வதற்காக தனது இரண்டு கைகளை உயரத் தூக்க அவை குறுகின. இவ்விறைவனை வேண்டி தன் குறையை போக்கிக் கொண்டார். குறுங்கை முனிவர் வழிபட்டதால் திருக்குறுக்கை எனப் பெயர் கொண்டு, காலப்போக்கில் கொருக்கை என்றானது. அஷ்ட வீரட்டானங்களுள் ஒன்று - தேவாரத்திருத்தலம்.
மூலவர்: வீரட்டேஸ்வரர், வீரட்டானர்: காமதகன மூர்த்தி, அம்பாள்: ஞானாம்பிகை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் வீரட்டேஸ்வரர். உயர்ந்த பாணமும் சதுர ஆவுடையும் கொண்ட அழகிய திருமேனி. யோகேஸ்வரர் என்ற திருநாமமும் உண்டு. மன்மதன் எய்த ஐவகை மலரம்புகள் இவரது திருமேனியில் பதிந்துள்ளன. அவற்றுள் தாமரை மலரின் தழும்பு மற்றவற்றை விடத் தெளிவாக தெரிகின்றது. சுயம்புலிங்க மூர்த்தம். மேற்கு பார்த்த சந்நிதி. கருவறையின் வடக்கு சுவரில் - காமன் தேரேறி வருதல், மலர் பாணம் தொடுத்தல், யோகத்திலிருக்கும் இறைவன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்தல் - ஆகிய காட்சிகள் புடைப்பு சிற்பங்களாக உள்ளன. அம்பாள் ஞானாம்பிகை அழகே உருவாக சாந்த ஸ்வரூபிணியாக எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். தெற்கு நோக்கிய சந்நிதி. கஜ ப்ருஷ்ட அமைப்பில் விமானமுள்ள சந்நிதி கொண்டுள்ள குறுங்கை விநாயகரை வணங்கி ஆசி பெற்று வலச்சுற்றை தொடரலாம். அருகே உள்ள தீர்க்கவாகு முனிவரின் விக்ரஹம் அழகாக இருக்கிறது. தீர்க்கவாகு முனிவர்க்கு பிரத்யட்சமான கணபதி என்பார்கள். உட்பிரகாரத்தில் வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், பிரம்மா, சோமாஸ்கந்தர் ஆகிய மூர்த்தங்களை தனித்தனி சந்நிதிகளில் தரிசிக்கலாம். சம்பு விநோத சபை என்கிற காமாங்க நாசினி சபையில் - காமதகன மூர்த்தி எழுந்தருளியுள்ளார். மேற்கரங்களில் மான், மழு கொண்டும், முன் வலக்கையில் அபய முத்திரை, இடக்கையை முழங்கால் வரை நீட்டியும், இடது காலை மடித்தும், வலது காலை தொங்கவிட்டவாறும் யோக மூர்த்தியாக வீற்றிருக்கின்றார். இடப்புறமாக அம்பிகை பூரணி எழுந்தருளியுள்ளார். ரதிக்கு அருள் செய்து மன்மதனை உயிர்ப்பித்த கோலம். நேர் எதிரே ரதி-மன்மதனின் உலாத் திருமேனிகளைக் காணலாம். ஸ்தல விருட்சமான கடுக்காய் மரத்தடியிலுள்ள செவி சாய்த்த நந்தியின் தோற்றம் வித்தியாசமானது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.