அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில் (திருமாகறல்)
God Name : மாகறலீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
சூரபத்மனை முருகன் சம்ஹாரம் செய்யும்போது தப்பி ஓடிய மாக்கிரகன் என்னும் அசுரன், இவ்விறைவனை வழிபட்டு வரங்கள் பல பெற்றான். இதனால் மாக்கிரகம் என இவ்வூர் பெயருற்று பின்னர் மருவி மாகறல் ஆயிற்றென்பர்.
தானே சிறந்தவன் என்ற செருக்கில் இருந்த பிரம்மா, சிவபெருமானிடம் சாபம் பெற்று விமோசனம் வேண்டி, இத்தலத்திற்கு வந்து சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். தினமும் ஒரு பழம் தரும் பலா மரத்தை இவ்வூரின் எல்லையில் நட்டு வளர்த்தார் என ஸ்தல வரலாறு.
ராஜேந்திர சோழன் பல ஸ்தலங்களுக்கு ஷேத்ராடனம் செய்து வருகையில், இவ்வூர் அருகே பொன் உடும்பு ஒன்றைப் பார்த்தான். பொன் உடும்பு புதரில் மறைந்தது. தோண்டிப் பார்த்ததில் சிவலிங்கம் இருந்தது. தோண்டியதால் ஏற்பட்ட தழும்பும் காணப்பட்டது. சிவலிங்கமும் உடும்பு வடிவில் காணப்பட்டது. ராஜேந்திர சோழன் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்பியதாக ஸ்தல வரலாறு.
இக்கோவிலின் பலாமரத்து பலாப்பழத்தை நாள்தோறும் ராஜேந்திர சோழனுக்கு அனுப்ப கட்டளையிட்டிருந்ததாகவும், அதை அவன் தில்லை நடராஜருக்கு நைவேத்யம் செய்வதாகவும் ஏற்பாடு. காலப்போக்கில் பழம் அனுப்புவது நின்று போகவே, கோபம் கொண்ட சோழன் மரத்தை தீயிட்டு கொளுத்தியதாகவும், பணியாளர்களை வேறு ஊருக்கு கடத்தியதாகவும் செவி வழி கதை ஒன்று உள்ளது. (திருத்தணி - திருவள்ளூர் இடையே விடிமாகறல் என்னும் ஊர்)
கோவிலின் அக்னி மூலையிலுள்ளது அக்னி தீர்த்தம். அக்னி தீர்த்த ஸ்நானம் - அகஸ்தியேச்வர தீர்த்தம்: யமலோக பயம் நாஸ்தி, சிவலோகே நிரந்தரம் என்று ஐதீகம். இதில் நீராடினால் பக்கவாதம், கண்பார்வை கோளாறு, எலும்பு முறிவு போன்ற வியாதிகளிலிருந்து குணம் அடைவதாக கூறுகின்றனர்.
சிறப்பு விசேஷங்கள் :
தேவாரத்திருத்தலம்
சோம வார தரிசனம் விசேஷம்.
மூலவர்: அடைக்கலம் காத்த நாதர், அம்பாள்: புவனநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் அடைக்கலம் காத்த நாதர். மூலவர் சுயம்புலிங்கம்.
ஆவுடையார் பின்னர் வைக்கப்பட்டது. சிவலிங்கத்தில் உடும்பு தழுவிக் கொண்டிருக்கும் கோலத்தில் தரிசனம் தருகிறார். (மாகறல் என்றால் உடும்பு) அகத்தீஸ்வரர், மாகறலீஸ்வரர், உடும்பீஸ்வரர், பார்த்தழும்பர், மாகறல் உடை நாயனார் என பல திருநாமங்கள் கொண்டவர்.
மாக்கிரகன் எனப்படும் மாகரன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்ததால் மாகறலீஸ்வரர். தாரையையும், சந்திரனையும் பரிந்து காத்ததால் பரிந்து காத்தநாதர் அல்லது அடைக்கலம் காத்தநாதர். பொன் உடும்பாக காட்சி தந்ததால் உடும்பீஸ்வரர். ரதியின் மாங்கல்யத்தை காத்தருளியதால் மாங்கல்யம் காத்தநாதர். அகஸ்தியர் வழிபட்டதால் அகத்தீஸ்வரர். தழும்பை மேனியில் கொண்டதால் பார்த்தழும்பர் என பல வித திருநாமங்களைச் சொல்லிப் போற்றுகின்றனர்.
கிழக்கு நோக்கிய ஆலயம். நுழைவாசலின் முகப்பில் இரண்டு அழகான நந்திகள் காணப்படுகின்றன. மூலஸ்தானத்தின் மேல் தூங்கானை மாட அமைப்பில் கஜப்பிருஷ்ட விமானம் உள்ளது.
விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை, விஷ்ணு, நால்வர், சந்திரன், அகஸ்தியர், காஸ்யபர், 63 நாயன்மார்கள், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். உற்சவரான சோமாஸ்கந்தரின் திருவுருவம் அழகாக இருக்கிறது. யானை மீது முருகன் அமர்ந்திருக்கும் அபூர்வ திருமேனியையும், அர்த்தநாரி பைரவரின் அபூர்வ திருமேனியையும் தரிசிக்கலாம்.
அம்பாள் புவனநாயகி தெற்கு பார்த்த சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். திரிபுவனேஸ்வரி என்ற திருநாமமும் உண்டு.
இத்தலத்தின் தெற்கே 3/4 கி.மீ. தூரத்தில் சேயாறு ஓடுகிறது. வடக்கு நோக்கி ஓடுவது விசேஷம். அதன் கரையில் பொய்யாமொழிப் பிள்ளையார் எழுந்தருளியுள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.