அருள்மிகு நடனபுரீஸ்வரர் திருக்கோவில் (திருச்சிற்றம்பலம்)
God Name : நடனபுரீஸ்வரர்
கலியுக வரதராஜ பெருமாள் கோவில்
பெரம்பலூர்
Call : +91-
தட்சனிடம் பெற்ற சாபத்திலிருந்து விடுபட நினைத்த சந்திரன், பல க்ஷேத்திரங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வரும் வழியில், இவ்வூரிலுள்ள வில்வ மரத்தடியில் லிங்கத்தை வைத்துவிட்டு, அருகேயுள்ள வளர்தொடடில் எனும் ஊருக்குச் சென்று பிரம்மபுரீஸ்வரரை தரிசித்துத் திரும்பி வந்து எடுக்க முயற்சித்தான். எடுக்க முடியவில்லை. பின்னர் இங்கேயே லிங்கத்தை ஸ்தாபித்து, இங்கு தீர்த்தம் ஒன்றை அமைத்து, இவ்விறைவனை வழிபட்டுப் பூஜித்து வரலானான்.
சிவபக்தரான ஞானசிந்து எனும் மகரிஷி தினமும் காலையில் தனுஷ்கோடி ஸ்நானமும், பகலில் கங்கா ஸ்நானமும், இரவு தில்லை நடராஜரின் தரிசனமும் என்று நியமம் வைத்திருந்தார்.
திரும்புகையில் பெருமழை பிடித்துக் கொண்டது. அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டார். தினமும் கடைபிடிக்கும் நியமத்திலிருந்து தவறிவிட்டதால், தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தார்.
அதாவது தான் கொண்ட விரதப்படி தீயை வளர்த்து அதில் பாய்ந்து உயிரை விட முற்பட்டார். அவர் முன் தோன்றிய நடராஜப் பெருமான், அவரைத் தடுத்தாட்கொண்டு, தாம் இங்கேயே நிரந்தரமாகக் கோவில் கொள்ளப் போவதாகவும், முனிவர் நித்ய விரதப்படி எங்கும் அலைய வேண்டிய அவசியம் இராது எனவும் கூறினார்.
நடராஜர் வடிவத்தில் இங்கு எழுந்தருளியதால், நடனபுரி என்றும் இறைவன் நடனபுரீஸ்வரர் என்றும் பெயர் கொண்டனர்.
மூலவர்: நடனபுரீஸ்வரர், அம்பாள்: சௌந்தரநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். ஒளி வீசும் உயரமான பாணம் கொண்ட அழகிய சிவலிங்கம். அம்பாள் சௌந்தரநாயகி பெயருக்கேற்றாற்போல் சௌந்தர்யமாக இருக்கின்றார்.
அர்த்த மண்டபத்தின் வாயிலில் கம்பீரமாக நிற்கும் துவாரபாலகர்கள். பிள்ளையார், வள்ளி - தெய்வயானை உடனாய ஞான முத்துக்குமாரஸ்வாமி, சிவகாமி சமேத நடராஜர், சனீஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை சிறப்பு மண்டபத்தில் தரிசிக்கலாம்.
உட்பிரகாரத்தில் நிருத்தி விநாயகர், சுப்ரமண்யஸ்வாமி, வள்ளி-தெய்வயானை, காசி விஸ்வநாதர், நால்வர், மஹாலட்சுமி ஆகியோரை தனித்தனி சந்நிதிகளில் தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.